நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முதலமர்வினை மேற்கொண்டபின் 11 பிரிவாக வேலைத்திட்டங்கள் கீழ் வகுக்கப்பட்டு அதன்கீழ் பிரதிநிதிகள் வேலை செய்துகொண்டு இருக்கிறார்கள். இதில் பெண்கள், முதியோர், சிறுவர்கள் நலவாழ்வுத்திட்ட வேலைத்திட்டத்தின் கீழ் லண்டன், பிரான்ஸ், கனடா, சுவிஸ், பிரதிநிதிகள் வேலை செய்து வருகிறோம்.
நாங்கள் இங்குள்ள மக்களையும் இணைந்து வேலை செய்வதற்காகப் பல பெண்கள் அமைப்புக்களையும் பல நிறுவனங்களையும் சில வெளிநாட்டுப் பெண்கள் அமைப்புக்களுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு வருகிறோம்.
எங்களுடன் சேர்ந்து இந்த வேலைத்திட்டத்தில் சேரவிரும்பு பவர்களைச் சேர்த்து பயிற்சிப் பட்டறைகளை செய்து வருகிறோம். இவர்கள் எப்படி மக்களுடன் சேர்ந்து வேலை செய்வதற்கான பயிற்சிகளும் அவர்களின் தனிப்பட்ட ஆளுமையை வலுப்படுத்துவதற்காகத்தான் இந்த பயிற்சிப் பட்டறைகளைச் செய்து வருகிறோம்.
எங்கள் நாட்டு மக்களுக்கு உதவுவதற்காக எங்களை அணுகி வருபவர்களை சில தொண்டு நிறுவனங்களுடன் இணைத்துவிட்டு அவர்கள் மூலம் செய்ய தொடர்புபடுத்தி வருகிறோம்.
விளையாட்டுவிழா, பரிசளிப்புவிழா, பொதுக்கூட்டம் போன்றவற்றில் பங்குபற்றி மக்களுடன் கதைத்து மக்களின் அபிப்பிராயம், அனுபவம் கேட்டு எங்கள் வேலைத் திட்டத்தில் வந்து வேலைசெய்ய விருப்ப முள்ளவர்களை இணைத்து வருகிறோம்.
இங்குள்ள மக்களை இணைத்து வேலை செய்வதற்காக தமிழர் மையங்கள் அமைக்கும் வேலைத்திட்டங்களும் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது இதன்மூலம் எங்கள் நாட்டுமக்களையும் ஒருங்கிணைப்பதற்கு இலகுவாகலாம் என்ற எண்ணத்துடன் செய்து வருகின்றோம்.
எங்கள் வேலைத்திட்டத்திற்கான ஆலோசனைக் குழுக்களும் அமைக் கப்பட்டு வருகின்றது. எமது வேலைத்திட்டத்துக்கென அமைக்கப்பட்ட குழுக்கள், திட்டங்களையும், ஆலோசனைகளையும் தயாரித்து வருகின்றன இதேபோன்று இந்த வேலைத்திட்டத்தில் இருக்கும் வெளி நாட்டுப் பிரதிநிதிகளும் இதற்கான வேலைகளை செய்து வருகிறார்கள்.
வடமேற்குப் பிரதேசத்தில் யாராவது என்னைச் சந்தித்து கதைக்க விரும்பினாலோ அல்லது எங்கள் வேலைத்திட்டத்தில் வந்து உங்களுக்கு எந்த வகையில் உதவமுடியுமோ, கீழ்க்காணும் முகவரியில் சந்திக்கலாம்.
For full details following the link below:
http://www.puthinamnews.com/?p=14144