[Athirvu.com, 29 August 2010]

ஆபிரிக்க காடு ஒன்றில் கூட்டமாக வரும் எருமைகள் மீது பதிங்கியிருந்து தாக்குதல் நடத்துகிறது சிங்கம். சிங்கத்திடம் அகப்பட்ட எருமைக் குட்டி, ஒரு ஏரியில் வீழ்கிறது. அதனைக் கரைக்கு இழுத்துக் கொலைசெய்ய சிங்கம் துடிக்கும்போது, போதாக்குறைக்கு முதலை ஒன்றும் அதன் கால்களைப் பிடித்து தண்ணீருக்குள் இழுக்கிறது( அது கே.பி என்று வைத்துக்கொள்வோம்) ஆனால் போராடிய எருமைக் குட்டியை, திரண்டு வந்த மற்றைய எருமைகள் மீட்டுச் செல்கிறது. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பது எருமைகளுக்கு நன்றாகப் புரிகிறதே, தமிழனாகிய எமக்கு எப்போது புரியப்போகிறது?