[Athirvu.com, 27 August 2010]

இதுவரை காலமும் வெளிநாட்டவர்கள் இலங்கை செல்லும்போது, விமானநிலையத்தில் வைத்தே அவர்களுக்கு இலங்கை அரசானது விசாவை வழங்கிவந்தது.(on Arrival Visa) தற்போது அந்த நடைமுறையை நிறித்திக்கொள்வதாக அது அறிவித்துள்ளது. அதாவது இலங்கையர் அல்லாத எவரும் இனி இலங்கைக்கு நேரடியாகச் செல்லமுடியாது. அந்த நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரங்களுக்குச் சென்று, விண்ணப்பப் படிவங்களை நிரப்பி, அதற்கான கட்டணத்தையும் கட்டியே இலங்கை விசாவைப் பெறவேண்டும். சுற்றுலாச் செல்லும் பயணிகளானாலும் சரி, தமிழர்களானாலும் சரி இனிவரும் காலங்களில் அவர்கள் தம்மைப்பற்றிய தகவல்களை கொடுத்து விசாவை விண்ணப்பித்தே எடுக்கவேண்டும் என்ற நிலை தோன்றியுள்ளது.

இதனால் இலங்கைத் தூதரகம் பெரும் பணத்தைச் சம்பாதிப்பதோடு, தேவைப்படும் பட்சத்தில் தமிழர்கள் குறித்த தரவுகளைம் தமது கணணிகளில் சேமிக்கவும் முடியும். இன் நடைமுறை இன்னும் 1 மாதகாலத்தில் அமுலாகலாம் என அரச வட்டாராங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும் இது நடைமுறைக்கு வந்தால் சுற்றுலாத் துறையில் பெரு வீழ்ச்சிகாணப்படும் என புத்திஜீவிகள் அரசாங்கத்தை எச்சரித்துள்ளனர். இருப்பினும் இறுதிமுடிவுகள் விரைவில் வெளியாகும் என கொழும்பில் இருந்து அதிர்வின் சிறப்பு நிருபர் தெரிவித்தார்.

அத்தோடு நின்றுவிடாது, வேலை செய்பவராயின் அது குறித்த தகவல்களையும், வங்கியில் உள்ள பணம் பற்றிய தகவல்களையும் இதன் மூலம் சட்டரீதியாகக் கோர முடியும், அச் சான்றிதழ்களை நாம் இலங்கைத் தூதரகத்திற்கு காண்பிக்கும் பட்சத்திலேலே, அவர்கள் விசாவை வழங்குவார்கள். சில வேளைகளில் இலங்கை அரசானது தனது விசா விண்ணப்ப படிவத்தில் நிபந்தனைகளையும், கட்டளைகளையும் இட முடியும், அதனை நாம் ஏற்று கையெழுத்து இட்டு விசாவைப் பெற்றுக்கொள்ளும் சாத்தியக்கூறுகளும் இருக்கிறது. இதன் அடிப்படையில் இலங்கைக்கும் இலங்கை அரசின் இறையாண்மைக்கும் எதிராக நான் செயல்பட மாட்டேன் என்ற வாசங்கள் விண்ணப்ப படிவத்தில் பொறிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இவ்வாறு விசாவைப் பெற்று இலங்கை செல்லும் நபர், ஒரு சிறிய குற்றச் செயலில் ஈடுபட்டாலோ, அல்லது இலங்கை அரசு அவர் தமது இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டார் என்ற குற்றத்தைச் சுமத்தி கைதுசெய்யவும் முடியும். தற்போது உள்ள நடைமுறையில் நாம் எந்த நிபந்தனைகளுக்கும் உட்பட்டு இலங்கை செல்லவேண்டியது இல்லை. இருப்பினும் இந்த புது நடைமுறையானது, தமிழர்களுக்கு பெரும் பாதகமாக அமைய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்பதை எவரும் எளிதில் மறுக்க முடியாது.