வணக்கம் உறவுகளே!
இன்று (28 07 2010 ) நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் சென்னை தண்டையார்பேட்டையில் மிக மிக சிறப்பான முறையில் நடந்து முடிந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்ப்பாடுகளை அருமைத்தம்பி இரா செழியன் அவர்களும், தண்டயார்பேட்டை நகர பொறுப்பாளர் தம்பி ஆனந்தராஜ் அவர்களும் வெகு சிறப்பாக செய்திருந்தனர். பேராசிரியர் தீரன், தமிழ்முழக்கம் சாகுல் ஹமீது, அண்ணன் திருச்சி வேலுச்சாமி, இயக்குனர் புகழேந்தி தங்கராசு, அன்புத்தென்னரசு, புதுக்கோட்டை செயசீலன், அமுதா நம்பி, சென்னை மாவட்ட பொறுப்பாளர் அதியமான், கருப்புக்குரல் ஐந்துகோவிலான், மற்றும் பலர் எழுச்சியுரையாற்றினார்கள்.
அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் சிறைசென்றபிறகு அண்ணன் இல்லாமல் நடந்திருக்கும் ஒரு பொதுக்கூட்டம். நினத்துப்பார்க்கமுடியாத அளவுக்கு பொதுமக்கள் மிகத்திரளாக திரண்டு வந்திருந்தனர்.
ஆயிரக்கணக்கான மக்களின் எழுச்சியை பார்த்து நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் திகைத்துப்போனார்கள். அண்ணன் கலந்துகொள்ளாத இந்தக்கூட்டத்தில் கூட திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்களின் கூட்டத்தயும் எழுச்சியையும் பார்த்து காவல்துறை அதிகாரிகளும் உளவுத்துறை அதிகாரிகளும் அதிர்ந்துபோனார்கள்!.
அன்புடன்
த சுகுமார்
போரூர் நகர பொறுப்பாளர்
www.naamtamilar.org
என்றும் அன்புடன்
தமிழன் த சுகுமார்