பதவி போட்டியில் தமிழீழ கனவை மறந்து எங்களை துண்டாட எத்தினை வழிகள் தேடிகிரார்கள் இந்த மூடர்கள் ?
ஒரு பக்கம் நோர்வேயில் இருந்து சிலர் எப்பிடியாவது உருதிரகுமாரனை கவிழ்க்க வேண்டும் என்று திரிகிறார்கள். இவர்கள் பிரச்சினை இன்றுவரை இவர்களால் தங்கள் கையுக்குள் இருந்த போராட்டம் இன்று மக்கள் கையுக்கு மாறுகிறதே என்கின்ற கவலை !
ஆயுத போரில் தோற்க போகும் போதும் மக்களை கனவுக்குள் வைத்து பணம் சேர்த்தவர்கள் இன்றும் எங்களை போராட விடுகிறார் இல்லை என்பதே உண்மை ! ஆயுத போரை நிறுத்தி மக்களாக தமிழீழ கனவை தொடர முன் வந்த பொது , இங்கே ஜனநாயக முறை நிச்சயம் தேவை. இங்கே தேசிய தலைவரின் வழிகாட்டலும் , மாவீரர்களின் தியாகமும் மட்டுமே மனதில் நிற்க , தமிழீழ அரசு நிச்சயம் ஒரு சரியான முடிவே !
கே பி என்கின்ற ஒரு தனி மனிதரை எங்கள் போராட்டத்துக்கு முதுகெலும்பாய் , சகலர் கண்ணிலும் மண்ணை தூவி ஆயுதத்தை கரை சேர்த்தமைக்கு நிச்சயம் மதிக்க வேண்டும். அவரை விலத்தி தலைவர் வைத்த காரணங்கள் , உண்மைகள் , பொய்கள் , என பல கதைகள் உண்டு . தெரியாத விடயத்தை அவரை எதிர்பவர்களின் கதையை வைத்து எடை போட முடியாது . எங்களுக்கு அது பற்றி பிரச்சினையும் இல்லை. இன்றைய திகதியில் கே பி கொடுக்கும் பத்திரிகை நேர்காணல்கள் அவர் தன மீது வரி பூசி கொள்ளும் சேறு . புலிகளின் ரகசியங்களை இன்று பலர் ஆர்வத்தோடு வாசிக்க இருப்பதால் , எதோ பித்தம் தலைக்கு ஏறி கே பி வரி இறைப்பது அவரது ஒரு கேவலமான குணத்தை எடுத்து காட்டி நிற்கிறது . ஆயுதங்களை கடத்தி பெரும் சவாலாக இருந்தவர் தலை மறைவு ஆகி இருந்தாலே , சிங்கள தேசம் தமிழன் வீழவில்லை என்று அஞ்சி நடுக்க போதுமானது . என்னை போன்ற சாதாரண மக்களே கே பி என்றால் பெரும் கடத்தல் மன்னன் என்று கற்பனை வளர்த்த வேளை , கே பி இற்கு வந்த கேவலங் கேட்ட அந்த பதவி ஆசை இன்று சிங்கள கோட்டைக்குள் அடைபட வைத்து விட்டது . அண்மையில் கே பி ஒரு சிங்கள நடிகை (அதுவும் ஒரு வயது முதிர்ந்த நடிகை) இடம் போய் பிச்சைகாரனை போல "அவாதான் எல்லாம் " என்று கூற கே பி ஒரு மனிதனா என்று காரி துப்ப வைத்து விட்டது. கே பி இற்கு ராஜதந்திரமும் தெரியாது ஒரு வெங்காயமும் தெரியாது , ஆங்க்லிமும் தெரியாது , ஒழுங்க தமிழும் தெரியாது . இவர் ஆயுதம் கடத்த மட்டுமே லாயக்கு !
இவ்வளவு நடந்தும் , பிச்சை கேட்டு பின்னால் பல வருடம் திரியும் டக்லஸ் , சித்தார்த்தன் , சங்கரி இற்கு இல்லாத மதிப்பு கே பி இற்கு கொடுக்கபடுகிறது என்றால் , அங்கே கே பி கொடுக்கும் நேர்காணல்களும் , விற்கும் ரகசியங்களும் , புலம்பெயர் தமிழரை குழப்ப நன்கு பயன்படும் என சிங்கள ராஜதந்திரிகளுக்கு தெரியும். இதற்கு உதவி செய்ய சில இனைய தளங்கள் தமிழனின் போராட்டத்தை கூவி விற்கின்றன. கே பி இன் தமிழீழ அரசு மீதான தாக்குதல்கள் , கலாநிதி ஜாய் மகேஸ்வரனின் நடவடிக்கைகள் என பல "சுட சுட " செய்திகளை போடுபவர்கள் " இது எங்கள் பதவி ஆசை காரணமாக , உருதிரகுமாரனை கவிழ்க்க எழுதபடுவது " என கடைசியில் கூறுவது பொருத்தம்.
நாடு கடந்த தமிழீழ அரசு ஒரு ஜனநாயக நிறுவனம் , இங்கே உருத்திர குமாரனே நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. இங்கே நாங்கள் எல்லாரும் ஒரே தமிழீழ கனவோடு பயணிப்பவர். இதிலே கே பி இன்றைய திகதியில் ஒரு அம்புலி மாமா கதை கூறும் ஒரு கலைஞர். அவரை அரசியலுக்குள் இனி உரையாட தேவை இல்லை. தனி மனிதன் மீது நம்பிக்கை வைத்து இனி போராட முடியாது ! நெடியவன் கூட நாளை மாறலாம் ! அதனால் தமிழீழ அரசில் உருத்திரகுமாரன் பெரியவனாகிவிட்டார் நெடியவனை விட உயர்ந்து விட்டார் என்று பொறாமை படாமல் இணையுங்கள் ! முதலில் இணையுங்கள் !
இங்கே தனி மனிதர் என்று நாங்கள் நம்புவது ஒரே தலைவர் தேசிய தலைவர். அவர் வெளிவராத இடத்து , தமிழ் ஈழம் என்ற நோக்கோடு நகர தொடங்குவோம் ! கே பி இன் நேர்காணல்கள் சிங்கள பத்திர்கைகளில் வரட்டும் ! தமிழ் இனைய தளங்களில் வேண்டாம் !
தமிழீழ அரசை மக்கள் பலமாக பாப்போம். இது புலம்பெயர் மக்களின் சர்வதேச போர். எங்கே எங்களை பிரதிநிதித்துவப படுத்துபவர் நிச்சயம் ஆங்கில மொழி , சகலரும் மதிக்கும் ஒரு பெரியவராக இருத்தல் காலத்தின் நியதி.
ஒரே கோடி புலிக்கொடி என்று கூறி . நெடியோரையும் குறியோரையும் புறம்தள்ளி , மக்கள் போராக , சகல நாடுகளும் ஏற்றுகொள்ளும் ஒரு போராட்டமாக மாற்ற வேண்டும். என்னை போன்ற ஒரு சாதாரண தமிழனுக்கும் இடம் வேண்டும் ! தனி மனிதர்களும் சில கூட்டங்களும் இணைய தளங்களில் மக்களை குழப்ப எண்ணி எழுதுவதை தவிர்த்து , பாலுடன் நீரை கலந்தாலும் பாலை மட்டும் அருந்தும் அன்னம் போல , தமிழீழ உணர்வை மட்டும் எழுதும் இணையதளங்களாக வெளிவரட்டும்.
தமிழீழ அரசு சரியான வழியில் பயணிக்கின்றது என்பதற்கு எங்கள் உறுபினர்களும் அவர்களோடு இணைந்து , வெறுமனே ஊளையிடாமல் , அறிவு பூர்வமாக முன்னெடுக்கும் புத்திஜீவிகளையும் மக்கள் என்றென்றும் தொடர்வர் என்பது உறுதி !
சில வெங்காயங்கள் பார்க்க சிவப்பாகவும் , உடனே காரமாகவும் இருந்தாலும் , முடிவில் உள்ளே ஒன்றும் இல்லை என்கின்ற உண்மை மக்களுக்கு இன்று தெரியும் , சிங்கள தளங்களில் GTF , TGTE , நெடியவன் என்று புலிகள் பிரிந்து நிட்பதாக மீண்டும் மீண்டும் எழுதுகிறார்கள்.
இந்த செய்தி சகலரையும் சென்றடைந்தாலும் , சில தமிழ் பத்திரிகைகள் , இதை உறுதி படுத்துவதை போல முழங்குவது நிறுத்தப்பட வேண்டும் . உண்மையில் மூளை நிறைந்த சமூகமாக , நாங்கள் தமிழீழ கனவை அடைய வேண்டுமானால் , யார் எதை தொடங்கினாலும் , ஜனநாயக வாய்ப்புகளுக்கு மதிப்பளித்து , சகலரையும் தமிழீழ கனவு பாதைக்குள் உள்ளடக்கி பயணிக்க வழி சமைப்போம்.
எதிரியின் பிரித்து அழிக்கும் சூழ்ச்சிக்கு அன்று பல தலைவர்கள் , பிறகு மாத்தையா , பின் கருணா-பிள்ளையான் , என்று கே பி என தொடரும் இல்ழ்புகள் தொடராமல் இருக்க ஜனநாயக முறை நிச்சயம் தேவை. ஒரு ஆயுத போராட்டத்தில் , ஒன்றிணைக்க ஒரு இயக்கம் மட்டும் தேவை என தலைவர் தீர்மானித்தது நிச்ச்சயம் சரி என்பதை வரலாறு கூறி நிற்கிறது. இனி மக்கள் புரட்சி , இது எங்கள் போராட்டத்தில் அடுத்த கட்டம். இங்கே ஆயுத போராட்டத்தில் முன்னின்றவருக்கு மட்டுமே இடம் என்று நினைக்க வேண்டாம். இது எல்லாரும் இணையும் களம். எங்கள் கெட்ட காலத்துக்கு புலிகளுக்கு தடை என்பதால் இன்று வேறு பெயரில் நடத்த வேண்டிய நிலைமை.
இன்று தமிழீழ அரசு என்ற ஒரு அமைப்பால் எத்தினை பேர் எங்கள் போராக , அச்சமின்றி எங்கள் பாராளுமன்ற உறுபினர்களுக்கு ஆதரவாக போராடுகிறோம் . கருத்து கூறுகிறோம் . இதுவரை எங்கள் கருத்தை ஒரு தடை செய்ய பட்ட இயக்கத்தின் ஆதரவாளர்கள் என்று பார்த்தவர், இன்று இது பூதகரமான மக்கள் பிரச்சினை என்று உணர வழி சமைத்தது தமிழீழ அரசும் , பிரித்தானிய தமிழர் பேரவையும் எண்டதில் ஒருவருக்கும் சந்தேகம் இல்லை . கனேடிய காங்கிரஸ் ஆகட்டும் , மக்களவை ஆகட்டும் , தமிழ் இளையோர் அமைபாகட்டும் , எல்லாரும் தமிழீழ கோட்பாட்டில் இயங்குப்பவரே ! தமிழீழ கனவை கைவிடவருக்கு என்ன நடக்கும் என்பதை கருணாவிடம் கேளுங்கள் !
இதனால் என்னையும் உன்னையும் அவனயும் இணைத்து பயணிக்க தொடங்க வேண்டும் ! எல்லாரும் இணைந்து, " மக்கள் போராட்டம் வெடிக்கட்டும்" என்று கூவி விட்டு இன்று மக்கள் போராக நாங்கள் பரிணமிக்க இந்த இணைய தளங்களில் பதிவு செய்யபடவேண்டியத்தை விடுத்து இழிவான செய்திகளை பதிதல் முறையல்ல!! உங்கள் குறுகிய மனப்பாங்கு நிச்சயம் மக்களால் முறியடிக்கப்படும் !
ஒரே கொடி புலிக்கொடி ! ஒரே தலைவர் தேசிய தலைவர் ! ஒன்றே குரல் "தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்"!
மீதி குழுக்கள் எல்லாம் எங்கள் போரின் புழுக்கள் ! இணைவோம் வெல்வோம் !
Raj Suthan