ஏ.9 வீதிக்கு கிழக்காக உள்ள முறிகண்டி, இந்துபுரம், சாந்தபுரம் பிர   முறிகண்டி, இந்துபுரம், சாந்தபுரம், செல்வபுரம்  பிரதேசங்களை உள்ளடக்கிய  4611ஏக்கர் நிலப்பகுதி படையினரின் பயன்பாட்டிற்காக அரசாங்கம் சுவீகரித்துள்ளதாக உத்தியோகப்பற்றற்ற முறையில் மக்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஜீரீஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மிகவும் வளப்படுத்தப்பட்ட குடியிருப்புகள் வயல்க் காணிகள் தென்னை பனை உள்ளிட்ட நிரந்தர வருமானங்களைப் பெற்றுக் கொள்ளக் கூடிய பயிர்ப்பிரதேசங்களைக் கொண்ட மக்கள் பாரம்பரியமா 3 தசாப்தத்திற்கு மேல் குடியிருந்த பெரு நிலம் படையினரால் அபகரிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

அண்மையில் முல்லைத்தீவு அரச அதிபரை இந்தப் பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் சந்தித்த போது உங்களது இந்தக் காணிகள் படையினரின் பயன்பாட்டிற்காக  அரசாங்கம் எடுத்துள்ளதாகவும் இவற்றிற்கு பதிலாக வேறு காணிகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளதாக ஜீரீஎன்னின் செய்தியாளர் உறுதிப்படுத்தி உள்ளார். எனினும் முல்லைத்தீவு அரச அதிபர் இதனை உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்த முடியாமல் இருப்பதாக ஜீரீஎன்னிற்குத் தெரிய வருகிறது.

2ஆம் இணைப்பு:‐ ஏ 9 வீதிக்கு கிழக்காக கிளிநொச்சி சாந்தபுரத்தில் இருந்து முல்லைத் தீவு வரை 2000 ஏக்கர்  நிலம் ஆக்கிரமிப்பு ‐  1200 குடும்பங்கள் நிர்க்கதி:‐  குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செவ்வி:‐

2010‐06‐04 12:26:56  (2010‐06‐05 13:50:56)

ஏ 9 வீதிக்கு கிழக்காக திருமுறுகண்டியில் இருந்து  கொக்காவில் மற்றும் இரணை மடு குளம் வரை  2கிலோ மீற்றர் நீள 2000 ஏக்கர்  நிலம் இந்துபரம், செல்வநகர், வசந்தபுரம், கிளிநொச்சியின் சாந்தபுரம்‐ ஆக்கிரமிப்பு ‐  1400 குடும்பங்கள் நிர்க்கதி:‐

குரல் ‐ வணக்கம் :

குருபரன் ‐ நாங்கள் இன்று அறிந்தோம். கிளிநொச்சி மாவட்டத்தினுடைய ஒரு பகுதியான சாந்தபுரம் பகுதியையும் முல்லைத்தீவு மாவட்டத்திலே திருமுறிகண்டியிலிருந்து கொக்காவில் வரையிலான 2 கிலோ மீற்றர் தூரம் வரையிலான பகுதியிலே இருக்கின்ற கிராமங்களிலே வாழுகி;ற மக்களை படையினர் மீளக் குடியமர்த்தாது மக்களைத் தடுப்பதோடு அந்தப் பிரதேசங்களை அவர்கள் தம் வசப்படுத்துவதற்கான முயற்சிகளிலே ஈடுபட்டிருப்பதாக அறிந்திருக்கின்றோம். அந்தப் பிரதேசத்திலே நீங்கள் குடியிருந்தவர்கள் என்ற வகையில் அந்த விடயங்கள் தொடர்பாக கூற முடியுமா?

குரல் : நாங்கள் இந்தக் கிராமத்தைப் பொறுத்த வரைக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த ஒட்டிசுட்டான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட திருமுறிகண்டி, இந்துபுரம் என்னும் இரண்டு கிராமங்களும் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தபுரம் என்னும் கிராமமுமாக மொத்தமாக 3 கிராம சேவையாளர் பிரிவுகளைச் கொண்ட 3 கிராமங்கள். இந்தக் கிராமங்களில் சுமாராக ஒரு 1200 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றார்கள். நாங்கள் 1977 , 1979 இனக் கலவரங்களின் போது தென்பகுதியிலிருந்து ‐ கூடுதலாக நூற்றுக்கு 80 சதவீதமான மக்கள் தென் பகுதியைச் சோந்தவர்கள். 79, 80, 83 காலப்பகுதிகளில்  இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு அங்கிருந்து பெரும்பான்மையின மக்களால் விரட்டியடிக்கப்பட்ட மக்கள். இங்கு வந்து பெரும் சிரமத்துக்கு மத்தியில் காடுகளை  வெட்டி அரசாங்கதோடு மிகவும் பிரயத்தனம் செய்து மிக நீண்ட காலத்தின் பிற்பாடு 1993 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அதற்கான பெமிற் ஒன்று  அரசாங்கத்தால் வழங்கப்பட்டது.

அன்று தொட்டு இன்று மட்டும் நாங்கள் இந்தக் கிராமத்தில் நிரந்தரமாக வசிந்து வாழ்கின்றோம். இந்த மக்களைப் பொறுத்த வரையில் மிகவும் வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட மக்கள். இங்கு வசதியாக உள்ளவர்கள் என்று நாங்கள் யாரையும் கூற முடியாது. அதாவது இனிமேல் இல்லை என்ற அளவுக்கு வறுமைப்பட்டவர்கள். நாங்கள் அதோடு நடந்த இனக்கலவரம் நாட்டு போர் சூழ்நிலை காரணமாக பல தடவைகள் இந்த இடத்தை விட்டு இடம்பெயர்ந்து போவதும் மீளத் திரும்ப வந்து குடியேறுவதுமாக பல தடவைகள் மீள மீள இடம்பெயர்ந்து சென்று மீள மீள திரும்ப வந்துதான் இங்கு காடுகளை திருத்தி நீண்ட காலம் சிரமத்திற்கு மத்தியில் காடுகளை கஸ்ரப்பட்டு வெட்டி பெரிய பயிர்களை வைத்து நிரந்தரமாகவே வாழ்ந்து வருகின்றோம். அநேகமாக இந்தக் கிராமத்தைப் பொறுத்த வரைக்கும் அரசாங்கம் தந்த பெமிற் ஒன்றை அரசாங்க ஆவணமாக வைத்திருக்கின்றோம். அரசாங்கத்தால வழங்கப்பட்ட எங்களுக்குரிய ஆவணமென்று நாங்கள் இதனை வைத்திருக்கின்றோம். ஆனால் நாங்கள் இன்று தற்போதுள்ள சூழ்நிலையில்  இடம்பெயர்ந்து 2 வருடங்களாகி விட்டன. இன்று வரைக்கும் அரசாங்கம் எம்மை எமது சொந்த இடத்தில் மீளக் குடியமர்த்துவதற்காக எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

என்ன விசயம் என்றால் எங்களை மீளக் குடியமர்த்துவதற்கு என்று அழைப்பார்கள். பிற்கு திடீரென்று நிறுத்தி விடுவார்கள். என்ன காரணம் என்று நாங்கள் ராணுவத்தோடு போய்க் கதைக்கும் போது அவர்கள்; உங்களது அரசாங்க அதிகாரிகள் ஊக்கமில்லாது சரியான  செயற்பாடு இல்லாமல் தாமதிக்கினம் என்று சொல்கிறார்கள். அப்ப நாங்கள் இது உண்மையா என்பதை அறிவதற்காக முகாமிலிருந்து மிகவும் கஸ்ரமான நிலையில் ( எங்களுக்கு இங்கை தொழில் வாய்ப்பு இல்லை, இந்த முகாமில் தண்ணீர் வசதி , சுகாதார வசதி , கல்வி வசதி எதுவுமே போதாத நிலையில். தொழில் இல்லை. மிகவும் கஸ்ரமான சூழ்நிலையில் வாழ்கின்றோம்.) உலக உணவுத்திட்டத்தினால் வழங்கப்படுகின்ற நிவாரணப் பொருட்களில் ஒரு பகுதியை வேறு விதமாகக் கொடுத்து அதன் மூலமாக பெற்றுக் கொண்ட காசில் தான் நாங்கள் ஒட்டிசுட்டான் பிரதேச செயலாளரிடம் ஒரு 100 மக்கள் மிகவும் சிரமத்திற்கு மத்தியில்  சென்றிருந்தோம். அந்தப் பிரதேச செயலாளரிடம் நாங்கள் எமது மீள் குடியேற்றம் எதற்காக தாமதப்படுகின்றது என அவரிடம் கேட்ட போது அவர் எங்களுக்கு அளித்த பதில் நாங்கள் எங்களாலான அனைத்து  முயற்சிகளையும் செய்து விட்டோம். ஆனால் நாங்கள் முயற்சி எடுத்து உங்களை ஏற்றுவதற்கான செயற்பாடுகளில் ஈடுபடும் பொழுது ராணுவத்தினரால் தங்களுக்கு  இந்தப் பிரதேசத்திற்குரிய மக்களைக்  கொண்டு வர வேண்டாம் என மறுப்புக் கடிதம் அனுப்பப்படுகின்றது. இதன் காரணத்தினாலேயே நாங்கள் தாமதிக்கின்றோமே ஒழிய நாங்களாக உங்களைக் கொண்டு செல்வதில் எந்தவித தாமதங்களையும் மேற்கொள்ளவி;ல்லை எனவும் தெரிவித்தார்.

இதற்கமைவாக நாங்கள் மீளவும் நாங்கள் சிவில் அதிகாரி எனச் சொல்பவரிடம் நாம் நேரடியாக் தொடர்பு கொண்டோம். அவர் உங்களுக்கு ஏ9க்கு கிழக்குப் பக்கமாக இருப்பின் இப்போதைக்கு உங்கனை ஏற்றமுடியாது எனவும் மேற்குப் பக்கமென்றால் வரச் சொன்னார். ஆனால் நாங்கள்  மேற்குப் பக்கமாக நாங்கள் குடியிருப்பதற்குரிய காணி எங்களுக்கு இல்லை. நாங்கள் விவசாயம் செய்யிறனாங்கள். ஏ9க்கு மேற்குப் பக்கமாக உள்ள இடம் ஒரு தாழ்வான இடம். அங்கை நாங்கள் நெற் செய்கைதான் செய்கிறதே ஒழிய குடியிருப்பதில்லை. அவர்கள் எங்களது குடியிருப்புக் காணிகளில் மீளக் குடியமர்த்தும் நிலையில் இல்லை என்று கூறினோம். . எங்களை மறுத்துக் கொண்டேயிருக்கின்றார்கள். நாங்கள் இது சம்பந்தமாக எங்களால் முடியுமான வரைக்கும் பல சிரமத்திற்கு மத்தியில் பல இடங்களுக்கு கடிதத்தின் மூலம் ஒரு மகஜராக அனுப்பியிருந்தோம். ஆனால் இதுவரைக்கும் எங்களுக்கு எதுவித ஆக்கபூர்வமாக பதிலும் கிடைக்கவில்லை.

இப்பொழுதும் நாங்கள் இங்கு முகாமில் இருக்கின்றோம். ஆனால் எமது பிரதேசத்தில் குடியமர்ந்தவர்களிடம் ராணுவத்தினர் கேட்கிறார்கள் இந்தப் பகுதியிலுள்ள காணிகளை எங்களுக்கு நீங்கள் சந்தோசமாக தந்துதவுங்கள் நாங்கள் உங்களுக்கு வேறிடத்தில் நல்ல காணியாகத் தருகின்றோம் என்று அங்குள்ள மக்களிடம் கேட்டுள்ளார்கள். அவர்கள் எங்களிடம் இதனை கூறுகின்றார்கள். அதாவது எங்களது காணியை எடுக்கும் நோக்கில் ராணுவம் செயற்படுகின்றது என்று. இது எங்களுக்கு பாரிய ஒரு துன்பம். என்னென்று சொல்வது. எங்களாலை சகிக் முடியாதவாறு இருக்கின்றது. நாங்கள் பல தடவைகள் இடப்பெயர்வைச் சந்தித்தோம். ஆனால் இந்த முறை இடப்பெயர்வில் நாங்கள் இழக்க வேண்டிய அனைத்தையும் இழந்து விட்டோம். உயிர் என்ற ஒன்றைத் தவிர எமது உறவுகளில் இருந்து சொத்துகள் வரை சகலதையும் இழந்த நிலையில் இந்த முகாமில் இருந்து வாடுகின்றோம்.  இப்ப நாங்கள் கேட்பதெல்லாம் என்னவென்றால் நாங்கள் கடைசியாக எல்லாத்தையும் இழந்த நிலையில் எமது காணியொன்று இருக்கின்றது. அந்தக் காணியில் மீளவும் போனால் நாங்கள் விவசாயமோ ஏதாவது செய்து மீளவும் எங்களது வாழ்க்கையை ஓட்டலாம் என்ற நம்பிக்கையில் இருக்கின்ற எங்களுக்கு இந்த செயற்பாடு பேரிடியாக அமைந்துள்ளது என்பதுதான். வெளிநாட்டில் வாழும் உறவுகள் அனைவருக்கும் நாங்கள் இதனை தெரியப் படுத்துகின்றோம். ஆகவே உங்களால் ஆனவரைக்கும் முடிந்த வரைக்கும் நீங்களும் இந்தப் பிரச்சனையை முன்னெடுத்து எங்களுக்காக குரல் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு உங்களுக்கு கூறி வைக்க விரும்புகின்றேன்.

குருபரன் ‐ கிட்டத்தட்ட 1200 குடும்பங்கள் என்றால் அண"ணளவாக எவ்வளவு பேர் மக்களின் தொகை வரும் என்று நினைக்கிறீர்கள்.

குரல் : சுமார் நாங்கள் ஒரு 4500 க்கும் 6000க்கும் இடைப்பட வரும் என நினைக்கிறேன்.

குருபரன் ‐ ஓ.. இதில நாங்கள் அறிந்தோம் 2000 ஏக்கர் வரையில் ராணுவம் வரையறுத்து அவற்றை ராணுவ முகாமாகவும் ராணுவக் குடியிருப்பாகவும் மாற்றுவதற்கு முனைகிறார்கள் என்று. ஏனென்றால் இந்தப் பிரதேசம் மிகவும் வளமான விவசாய நிலங்களையும் நீரை எடுக்கின்ற கிணறுகளையும் சோலைகளையும் கொண்ட பிரதேசம் என்று சொல்லியும். ஆதால அவற்றை முற்றாக ராணுவக் குடியிருப்புக்களாக மாற்றுவதற்கான முயற்சிகள் என்றுதான் கூறுகிறார்கள். அது பற்றி நீங்கள் ஏதாவது கேள்விப்பட்டீர்களா?

குரல் ‐ : நாங்கள் திட்டவட்டமாக எமது  ஏ9க்கு மேற்குப் புறமாக உள்ள மக்களிடம் ரihணுவத்தினர் வந்து எங்களுக்கு இந்தக் காணிகளை விட்டுத் தாருங்கள் என்று கேட்ட பொழுது அதற்கு எமது மக்களில் ஒருவர் திரும்பக் கேட்டிருக்கிறார். எதற்காக ஐயா எங்களது காணியை நீங்கள் எடுக்கிறீர்கள் என்று சொல்லி. அதற்கு அவர் வாய் மூலமாக அளித்த பதில் தாங்கள் ராணுவக் குடியிருப்புகளை மேற்கொள்வதற்காகத்தான் தாம் இதைக் கேட்கிறோம் என்றும் உங்களும் நல்ல வளமான வேறு இடத்தில் காணி தருகிறோம் என்று எங்களிடம் பாசாங்கு பண்ணி பேக்காட்டும் பாணியில் தெரிவிக்கின்hறார்கள் அவர்கள்.

இங்கு எங்களது எல்லாரது ஒவ்வொரு காணிகளிலும் ஒவ்வொரு கிணறுகள் உண்டு. தோட்டம் செய்யக் கூடிய நாங்கள் எல்லாரும் நல்ல வளமான தென்னைகள் , மா, பலா போன்ற நாளாந்தம் வருமானம் தரக் கூடிய பயிர்களை வைத்துக் கொண்டிருக்கின்றோம். இப்பவும் இங்கிருந்து வருமானம் பெறக் கூடிய வகையில் நாங்கள் வாழந்து வருகிறோம். நல்ல வளமான இடமாக இருப்பதால் அதனை அபகரிக்கும் நோக்கத்தில்தான் ராணுவத்தினர் செயற்படுகின்றார்கள். ராணுவக் குடியேற்றம் என்பதுதான் அங்கு முக்கியமாக கருதப்படுகின்றது.

குருபரன் ‐ அப்ப இதுவரைக்கும் ஏற்கனவே முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் திருகோணமலை மாவட்டத்திற்கும் அரசாங்க அதிபராக இருக்கக் கூடிய சி ஆர் டி சில்வா என்ற ராணுவ அதிகாரியை இடமாற்றம் செய்வதாகவும் இருக்கி;றார்கள். இது குறித்து நீங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது அரசாங்த் தரப்போடு முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றீர்களா? உங்களுடைய பிரச்சினைகளைச் சொல்வதற்கு.

குரல் : நாங்கள் இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரசாங்க அதிபர், முல்லைத்தீவுக் கச்சேரி ஜீ.ஏ. அவர்களுக்கும் எமது உதவி அரசாங்க அதிபர்களுக்கும் மற்றது ராணுவ அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு செயலாளர் வரைக்கும் நாங்கள் இது சம்பந்தமாக எமது கோரிக்கைகளை முன்வைத்து எமது காணிகளை எமக்கு வழங்கும் படி அவர்கள் அனைவருக்கும் கடிதம் மூலம் 300‐ 350 பொது மக்களுக்கு மேல் எல்லா மக்களிடமும் நாங்கள் கையெழுத்து வாங்க முடியாத ஒரு பிரச்சினை உள்ளது. காரணம் என்னவென்றால் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த வந்த எங்களை ஒவ்வொரு பகுதியனரையும் ஒவ்வொரு முகாமாகப் பிரித்து வைத்திருக்கிறார்கள். ஆகவே எமது கிராமத்தைச் சேர்ந்த மக்கள் 4 , 5 முகாம்களில் இருப்பதால் எங்களுக்கு எல்லாரிடமும் கையெழுத்து வாங்கக் கூடிய வசதி எங்களுக்கு இல்லாததால் மிகவும் குறுகிய ஒரு 300 – 350க்குள்ள கையெழுத்துக்களை வாங்கி அவர்களுக்கு மகஜர்களாக அனுப்பியுள்ளோம். ஆனால் இதுவரைக்கும் எங்களுக்கு எந்தவிதமான ஆக்கபூர்வமான பதிலும் கிடைக்கவில்லை.

குருபரன் ‐ ஆம் நன்றி உங்களுடைய பிரச்சினைகளை எங்களோடு இணைந்து கொண்டு தெரிவித்தமைக்கு நன்றி. உங்களுடைய இந்த விடயம் எங்களுடைய இணையத்தின் வாயிலாகவும் ஏனைய ஊடகங்கள் வாயிலாகவும் இயன்றவரை எல்லோரையும்  சென்றடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்.  உங்களுடைய காணிகள் மீண்டும் உங்களுக்கு கிடைப்பதற்கு அல்லது மீண்டும் நீங்கள் உங்கள் சொந்த இடங்களில் குடியமர்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கான உங்களுடைய முயற்சிகளுடன் நாங்களும் இணைந்து கொள்கிறோம். எமது gtbc.fm வானொலி மற்றும் குளோபல் தமிழ் செய்திகள் இணையத் தளத்திற்கும் தந்த செவ்விக்காக நாங்கள் உங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

குரல் ‐ நன்றி எமது நிலைமையையும் எமது கருத்துக்களையும் மிகவும் பொறுமையோடு கேட்டமைக்காகவும் எமக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில் இந்த செவ்வியை செவிமடுக்கும் அனைவரும் எமக்காக குரல் கொடுத்து ஒத்துழைப்பு வழங்குவீர்கள் என்ற நம்பிக்கையோடு நாங்கள் இந்த முகாமில் காத்திருக்கிறோம் எனக் கூறி பிரதேச மக்கள் சார்பில் அதாவது திருமுருகண்டி , இந்துபரம் சாந்தபுரம் ‐ இதில் ஒரு விடயத்தை நான் கூற மறந்து விட்டேன் சாந்தபுரம் கிராமம் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்ததாயினும் எமது கிராமத்திற்கு அண்மையிலுள்ள கிராமம். அந்த சாந்தபுரம் கிரமத்தைச் சேர்ந்த 450 க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்நதவர்கள் சுமார் 1000 ‐1400 பேரைக் கொண்ட ஒரு தொகுதியினரை கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்தில் ஒன்றரை மாதமாக முகாமிலிருந்து மீள்குடியேற்றத்திற்கு என அழைத்துக்கொண்டு  சென்றவர்கள். இன்னும் அவர்களை மீளக் குடியமர்த்தவில்லை என்பதனையும் தங்களுக்கு கூறி இதுவரை எமது நிலைமைகளை பொறுமையுடன் கேட்ட அனைவருக்கும் எமது நன்றியை எமது மக்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=25344&cat=1