Jul 28, 2010 / பகுதி: செய்தி / யாதவன்

இராணுவத்தின் முல்லைத்தீவு பிராந்தியத்திற்கான கட்டளை தளபதியாக பணியாற்றிவரும் மேஜர் ஜெனரல் பிரசன்னா டி சில்வாவை பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலய அலுவலத்தின் பதவியொன்றில் அமர்த்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சா தீர்மானித்துள்ளதாக பாதுகாப்புச் அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலம்பெயர் தமிழர்கள் அதிகமாக வாழும் நாடுகளில் உள்ள இலங்கை தூதரங்களுக்கான அதிகாரிகளாக மூத்த இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்து தகவல்களை வழங்குவதற்காகவே இந்த இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர்.

ஆனால் சிறிலங்கா அரசினால் நியமிக்கப்படும் இராணுவ அதிகாரிகள் அனைவரும் போர்க்குற்றங்களை மேற்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் நடைபெற்ற வன்னிப் போரில் 55 ஆவது படையணியை சாலை வழியாக வழிநடத்திய மேஜர் ஜெனரல் பிரசன்னா சில்வா, பின்னர் மே மாதம் முள்ளிவாய்க்கால் பகுதியில் நடைபெற்ற படுகொலைகளிலும் முக்கிய பங்கு வகித்திருந்தார்.

அதேவேளை, இராணுவத்தின் உயர்மட்ட பதவிகளிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் மெதிவெல தெரிவித்துள்ளார்.

பதிவு

http://www.pathivu.com/news/7937/58//d,article_full.aspx