a) Declaration of "May 19" - "The Day of The Oppressed Nations" - புதினப்பலகை உலகின் அடக்கப்படும் தேசிய இனங்கள், வல்லாதிக்க சக்திகளுக்குத் தமது அதிருப்தியை அர்த்தபூர்வமாக வெளிப்படுத்தும் ஒரு நாளாக
"மே 19" பிரகடனப்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறாக - அடக்குமுறைக்கு உள்ளாகியுள்ள ஏனைய தேசிய இனங்களுடன் கூட்டுச் சேருவதே - அந்த மக்களின் போராட்டத்தோடு இணைத்து எமது போராட்டத்தையும் முன்னெடுப்பதே - அவர்களது ஆதரவையும் எமது போராட்டத்திற்குப் பலமாகக் கட்டி எழுப்புவதே - எதிர்காலத்திற்கு உகந்த ஒர் அணுகுமுறையாகவும், தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தினைப் புதிய செல்நெறி ஊடாக முன்னெடுக்கும் ஓர் செயற்பாடாகவும் அமையும். (Read in full here, புதினப்பலகை )
b) மே ( வலி சுமந்த மாதம் ) video முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம்…. video
c) உண்மை
d) கனடியத் தமிழ் இளையவர்களால் நான்காவது நாளாக தொடர்ந்து முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு போராட்டம், here
e) ஈழத்தமிழர் நினைவு நாள்
ஈழத் தமிழர்களின் 26 வருடங்கள் ஆயுதப் போராட்டத்தின் முக்கிய களமாக, காலமாக அமைந்த மே மாதம் 2009ம் ஆண்டு ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் அநியாயமாகக் கொல்லப் பட்டார்கள். குறிப்பாக முதல் இரண்டு வாரங்களுக்குள் மட்டும் 20,000 ற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்.
கொடிய போரிலே கொன்று அழிக்கப்பட்ட அப்பாவி மக்களை நினைவு கூருவதும் அவர்கள் அந்தக் காலப் பகுதியிலே சந்தித்த கொடிய அவலங்களை, வேதனைகளை நினைத்துப் பார்ப்பதும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களாகிய எங்களின் கடமையாகும்.
ஈழத் தமிழர்கள் பட்ட இந்த கொடிய துயரை நாம் நினைவுபடுத்திக் கொள்ளவும், எமது குழந்தைகள் வருங்கால சந்ததியினர் ஈழத்தமிழினம் அனுபவித்த இந்த மறக்கமுடியாத அவலங்களை என்றென்றும் மறக்காமல் இருக்கவும், உலகெங்கும் வாழும் தமிழர்களாகிய நாம் – மே மாதம் 18 ம் திகதியை “ஈழத்தமிழர் நினைவு நாள்” எனப் பிரகடனப் படுத்தி அவர்களை நினைவுகூருதல் காலத்தின் தேவையும், கட்டாயமுமாகும்.
ஈழத்தமிழினத்தின் நீண்டகாலத் துயரங்களும், இழப்புகளும் எளிதிலே மறந்துவிட முடியாது என்பதனை எடுத்துச் சொல்வதோடு, அவர்களின் நியாயமான உரிமைகள் கிடைத்து சமாதானமும் சுதந்திரமும் கொண்ட வாழ்வு வாழ எங்களின் ஆதரவு என்றும் இருக்கும் என்பதனையும் உலகத்தில் பரந்து வாழும் தமிழர்களின் ஒன்றுபட்ட இந்தச் செய்கையானது உறுதி செய்வதாக அமையும்.
1) ஈழத்தமிழர் நினைவு நாள் என்றால் என்ன?
2008 – 2009 ம் ஆண்டு காலப் பகுதிகளில் போரிலே மடிந்த அப்பாவித் தமிழ் மக்களை நினைவுகூர்ந்து நடாத்தப்படும் அமைதியான உண்ணாநோன்பு நிகழ்வு.
2) ஈழத் தமிழர் நினைவு நாளில் என்ன செய்யலாம்?
- மதியம் 12.00 மணியிலிருந்து பிற்பகல் 6.00 மணிவரை உண்ணா நோன்பினைக் கடைப்பிடித்தல்.
o மதிய உணவினை முற்றாக விலக்குதல்
o பழரசங்கள், மதுபானங்கள் உட்கொள்ளாமல் இருத்தல்
o மாமிச உணவுகளைத் தவிர்த்தல்
- உண்ணா நோன்பினை பிற்பகல் 6.00 மணிக்கு முடித்தல்
o ஒருவாய்ச் சோறுடனும் சிறியளவு உப்புடனும் உண்ணா நோன்பினை முடித்தல்
o ஒருவாய்ச் சோறு – எமது மக்கள் பட்டினியால் ஒருவாய்ச் சோறுகூட இன்றி அவதிப்பட்டதையும் சிறிய உப்பு – குடிப்பதற்குத் தண்ணீர் இன்றி தாகத்தால் தவித்ததையும் உணர்த்துவதாக அமையும்.
3) எங்கே உண்ணா விரதத்தினைக் கடைப்பிடிக்கலாம்?
- உங்கள் இல்லங்களில்
- உங்களுடைய வழிபாட்டுத் தலங்களில்
- நிகழ்வுக்காக ஒன்றுகூடும் இடங்களில்
4) எப்போது ஈழத்தமிழர் நினைவு நாள் கடைப்பிடிக்கப்படும்?
- ஒவ்வொரு வருடமும் மே மாதம் 18 ம் திகதியில் இதனைக் கடைப்பிடிக்கலாம்