Tuesday, 22 November 2011, 9:45

http://www.youtube.com/watch?v=4zXGr1tGXvY&feature=player_embedded part 1

http://www.youtube.com/watch?v=wQQOVBZgpUk&feature=related part 2

http://www.youtube.com/watch?v=W7goCKR_w2I&feature=related part 3


தமிழ் மக்கள் போர்க்குற்றம் தொடர்பான நடவடிக்கைகளை மட்டும் முன்னெடுத்து செல்லாது இலங்கை அரசின் கடந்த 60 வருடகால தமிழ் இனப்படுகொலையையும் சேர்த்து முன்னெடுக்க வேண்டும் எனவும், வடக்கு மாகாண சபைத் தேர்தலை தமிழ் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிப்பதோடு, அது பிழையானவர்களின் கைகளுக்கு செல்லாதிருப்பதற்காக தமிழ் புத்திஜீவிகளை நிறுத்த வேண்டும் எனவும், அதற்கு தமது ஆதரவு இருக்கும் எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடந்தவாரம் லண்டனில் உள்ள தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில் தெரிவித்திருக்கிறார்.கட்சி அரசியலை முன்னிலைப்படுத்திச் செயற்படுவது தமிழ் தேசியத்திற்கு ஆபத்தானது என்றும் தெரிவித்தார்.


வடக்கு மாகாண சபைத் தேர்தல்

மாகாண சபைகள் என்பது 13 திருத்தச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்விற்காக ஒற்றை ஆட்சி முறைமைக்கு அமைவாக வழங்கப்பட்ட ஒன்று எனவும் அது எந்தவித அதிகாரமும் அற்ற அமைப்பு எனவும் தெரிவித்த கஜேந்திரகுமார், இது தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் தெரியும் எனவும், அப்படிப்பட்ட அதிகாரங்கள் அற்ற மாகாண சபை தேர்தலில் கூட்டமைப்பு போட்டியிடக் கூடாது எனவும், அது பிழையானவர்களின் கைகளுக்கு சென்று விடாமல் தடுப்பதற்காக கூட்டமைப்பு தமிழ் புத்திஜீவிகளை சுயேட்சை குழுவாக நிறுத்துமாயின் அதற்கு தமது ஆதரவு இருக்கும் எனவும் கஜேந்திரகுமார் தெரிவித்தார்.

போர்குற்றங்களும் இனப்படுகொலைகளும்

வெறுமென போர்க்குற்;றத்தை வலியுறுத்துவதானால் போர்குற்றத்தில் ஈடுபட்டவர்களை மட்டுமே தண்டணைக்குள்ளாக்கும் எனவும் இதனால் கடந்த 60 வருடங்களாக இலங்கை அரசால் திட்டமிட்டு மேற்கொள்ளும் இனப்படுகொலை சர்வதேசத்தின் கண்களிலிருந்து மறைக்கப்படுவதோடு தமிழ்மக்களின் இதுவரைகால இழப்புக்களிற்கு உரிய தீர்வு கிடைக்காமல் போகலாம் எனவும், இதனால் போர்க்குற்றத்தோடு இலங்கை அரசின் திட்டமிட்ட இனப்படுகொலைகள் தொடர்பாகவும் வலியுறுத்த வேண்டும் எனவும் கஜேந்திரகுமார் தெரிவித்தார்.

இக் கலந்துரையாடலில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, ஊடகங்கள் பக்கச் சார்பாக செயற்பட்டமை மற்றும் இந்தியாவில் நாச்சியப்பன் ஒழுங்கு செய்திருந்த கலந்துரையாடலில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பாகவும் கஜேந்திரகுமார் கருத்துத் தெரிவித்திருந்தார். அதன் முழுவடிவம் காணொளியாக இங்கே இணைக்கப்பட்டுள்ளது.