தமிழர் தேசிய கூட்டமைப்பு அமெரிக்காவிடம் போர்க்குற்றவியலுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்: ஒபாமிற்கான தமிழர் அமைப்பு


அமெரிக்கா அரசின் அழைப்பின்பேரில் அமெரிக்காகவரும் தமிழர் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இராஜபக்சா அரசின் இனப்படுகொலைக்கு எதிராக அமெரிக்கா அரசின் ஆதரவைப் பெறுவதிலேயே முக்கிய விடையமாக கருதி அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ஒபாமாவுகான தமிழர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டும், மானபங்கப்படுத்தபட்டு கற்பழிக்கப்பட்ட பின்னரும், வரும் உங்கள் வருகை அந்த கொலைகளுக்கும் கற்பழிப்புகளுக்கும் நீதி கோருவதாக அமைய வேண்டும் என்றும், இந்த அமைப்பு வேண்டுகோள் விடுக்கின்றது.

அமெரிக்கா அரசிடம் நீங்கள் பேசும் போது தமிழர்கள் அனுபவித்த துயரத்தை தெழிவாக எடுத்துக்கூற வேண்டும். அமெரிக்காவில் தீவிரமாக தமிழர் துயர் துடைக்க இயங்கும் எமது அமைப்பின் கணிப்பின் படி அமெரிக்க மக்களும் அரச அதிகாரிகளும் எமக்கு நடந்த படுகொலையை சனல்4 மூலம் பார்த்து அதிர்ந்து போய் உள்ளார்கள்.

தமிழர்களின் பாதுகாப்புக்கு ஏதாவது திடமான நடவடிக்கை எடுப்பதற்கே அமெரிக்கா அதிகாரிகள் விரும்புகின்றார்கள். அதற்கு முதல்படியாக இராஜபக்சா ஆட்சியினரை குற்றவாளிக் கூண்டில் ஏற்ற ஆர்வமாக உள்ளார்கள். உங்கள் அமெரிக்க வருகை இந்த நடவடிக்கைகளுக்கு ஏதுவாக இருக்கவேண்டுமே தவிர குந்தகம் விளைவிக்கக்கூடாது.

பூட்டிய அறைக்குள் நடக்கும் கூட்டங்களில் தமிழர் அபிலாசைகளை பலப்படுத்த வேண்டுமே தவிர பலவீனப்படுத்தக்கூடாது.

உங்களுக்கு கிடைத்த இந்த அரிய சந்தர்ப்பத்தை இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை என்ற பெயரில் கோட்டை விட்டு விடவேண்டாம் எனவும் வேண்டுகின்றார்கள்.

முள்ளிவாய்கால் அவலத்தின் பின் வென்றெடுத்த முக்கிய ஆதரவுகளை உங்கள் நடவடிக்கை மூலம் பாழடிக்க வேண்டாம் என்றும் இந்த அமைப்பு வேண்டுகின்றது.

அமெரிக்கா அதிகாரிகள் பலர் உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றார்கள். உங்கள் வரவு தமிழ் இனத்தின் நிரந்தர விடுதலைக்கு போடும் ஒரு அத்திவாரக் கல்லாக இருக்கவேண்டுமே தவிர, அடகு வைக்கும் பயணமாக இருக்கக் கூடாது எனவும், ஒபாவிற்கான தமிழர் அமைப்பு வேண்டுகோள் வைக்கின்றது.

தொடர்புகளுக்கு: (617) 765-4394

இணையத்தளம்: www.tamilsforobama.

com