www.eeladhesam.com – Tamileelam

Network – eeladhesam@hotmail.co.uk

வெள்ளிக்கிழமை, 14 அக்டோபர் 2011 20:33

யேர்மனியில் நடந்த மனிதநேய செயற்பாட்டாளர்களின் வழக்கும் அதன் பின் ஒழிந்திருக்கும் உண்மையும் – நேர்காணல் திரு விராஜ் மென்டிஸ் (சர்வதேச மனித உரிமை அமைப்பு பிரேமன்)

http://eeladhesam.com/images/stories/new/news/01.12.2009/mendis.jpgபயங்கரவாதத் தடுப்புச்சட்டம் மற்றும் வெளிநாட்டு வியாபாரச்சட்டத்திற்கு எதிராகச் செயற்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நான்கு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பணியாளர்களில் சசி, செந்தில் ,அகிலன் ஆகிய மூவர் கடந்த புதன்கிழமை யேர்மனிய நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

எனினும் இவர்கள் மீது சுமத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக சட்டத்தரணிகள் பல ஆதரங்களையும் சனல் 4 தொலைக்காட்சியின் கொலைக்களம் வீடியோப்பதிவும் நீதிமன்றில் சமர்ப்பித்து வாதாடியதை அடுத்தும் இலங்கையில் தமிழ் மக்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் கருத்தில் கொண்டும் பயங்கரவாதத்திற்கு ஆதரவாகச் செயற்பட்டதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதுடன், வெளிநாட்டு வியாபாரச்சட்டத்திற்கு எதிராகச் செயற்பட்டதாக மட்டுமே விசாரணை மேற்கொள்ளப்பட்டு கடந்த புதன்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது.ஆயினும் ஒருவர் மட்டும் தொடர்ந்தும் யேர்மனிய வியாபாரச் சட்டமுறைமைகளை மீறிய குற்றச்சாட்டில் விடுதலை செய்யப்படவில்லை.குற்றம் சுமத்தப்பட்டவர்கள் சார்பில் எட்டு சட்டத்தரணிகள் வாதாடியதுடன் ஆறு நீதிபதிகளை கொண்ட அமர்வில் தீர்ப்புச் சொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

ஆறு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்ற விசாரணையில் ஒவ்வொரு தவணையிலும் நேரடியாக கலந்து கொண்ட திரு Viraj Mendis (சர்வதேச மனித உரிமை அமைப்பு பிரேமன்) அவர்களுடன் இது சம்மந்தமாக தொலைபேசி ஊடாக நேர்காணல் செய்திருந்தோம் . அதில் இவ் வழக்கின் சில தகவல்களையும் அத்தோடு தீர்ப்பின் முடிவையும் கேட்டிருந்தோம் .

அதில் அவர் கூறுகையில் இந்த வழக்கு யேர்மனியில் மிக ஒரு முக்கியமான வழக்கு என்பதையும் அத்தோடு அதில் தலைமை நீதிபதியாக கடமையில் இருந்தவர் வழக்கின் ஆரம்பத்தில் மிக ஒரு கடுமையான அனுபவம் மிக்க ஒரு நீதிபதியாக இருந்தார் என்றும் ஆனால் அங்கு குற்றம் சுமத்தப்பட்டவர்கள் சார்பில் எட்டு சட்டத்தரணிகள் வாதாடியதுடன் அங்கு முன்வைக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் வழக்கின் தொடர்ச்சியில் அவர் மிக இதயபூர்வமான நிலையில் காணப்பட்டார்.அதே போல் அங்கு ஒரு காவல்துறை அதிகாரி சாட்சி கூறும் போது , தானும் ஒரு தமிழனாக இருந்தால் கைதுசெய்யப்பட்ட நாலு தமிழர்கள் எப்படி தம் மக்களுக்கு உதவினார்களோ அப்படியேதான் தானும் செய்திருப்பார் என்று எடுத்துரைத்தார்.தீர்ப்பு பத்திரங்களில் கடுமையாக இருந்தாலும் (2 இருந்து 4 ஆண்டுகள் ) , ஆனால் 3 நண்பர்கள் உடனடியாகவே விடுதலை செய்யப்பட்டார்கள்.இதன் காரணம் வழக்கின் தொடர்ச்சியில் இரு உயர்தர யேர்மன் அரசாங்கத்தின் உத்தியோகஸ்தர்கள் வழக்கை எதிர்த்து வாதாடியவர்களுக்கு சார்பாக சாட்சியளிக்க முன்வருகையில் இறுதி நேரத்தில் அவர்கள் யேர்மன் வெளிவிவகார அமைச்சால் வழக்கின் பின்னணி காரணத்தால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இந்த வழக்கு உண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்தால் தமிழீழ விடுதலைப்புலிகளை தடை விதித்ததன் அடிப்படையில் தான்உருவானது , தடை இல்லையெனில் இந்த வழக்கு வந்திருக்கவே மாட்டாது. சாட்சியளிக்க இருந்த இரு உயர்தர யேர்மன் அரசாங்கத்தின் உத்தியோகஸ்தர்கள் ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப்புலிகளை தடைசெய்யும் போது யேர்மனி எந்த நிலையை எடுத்துக் கொண்டது என்பதை அவர்கள் கூறயிருந்தார்கள்.தடையை யேர்மனி அதிருப்பியோடு கவனித்தார்கள்.இது சம்மந்தமான தகவல்களை வழக்கின் போது சாட்சிகள் கூறயிருந்தார்கள். ஆனால் இறுதி நேரத்தில் அவர்கள் நிறுத்தப்பட்டார்கள் . இந்த விடையம் தீர்ப்பில் ஒரு மிக முக்கியமான காரணமாக எடுக்கப்பட்டிருக்க முடியும்.ஏனென்றால் நீதிபதிகளும் நிச்சயமாக ஏன் அவர்கள் இறுதி நேரத்தில் முன்வரவில்லை என்பதை ஆராய்ந்திருப்பார்கள்.

அடுத்த கேள்வியாக இந்த தீர்ப்பின் முடிவு தங்களுக்கு திருப்தி அளிக்கிறதா அத்தோடு இந்த தீர்ப்பு எவ்வளவு தூரம் தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கு முக்கியமாக அமைகின்றது என்று கேட்டிருந்தோம்.

அதற்கு அவர் கூறுகையில் நாலு நபர்களில் ஒருவர் என்னும் விடுதலை செய்யப்படவில்லை என்பதால், தான் இந்த தீர்ப்பில் திருப்தி அடையவில்லை என்றும், அத்தோடு நீதியமைச்சு நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகள் அனைத்து குற்றங்களுக்கும் இலங்கை அரசாங்கமே பொறுப்பு என்பதை ஏற்கும் வரை நான் திருப்பதி அடையமுடியாது என்று எடுத்துரைத்தார்.இலங்கை அரசாங்கமே இந்த நீதிமன்றத்தில் நிற்பாட்டப்படவேண்டும், உதாரணத்துக்கு யேர்மனியில் ராணுவத்தளபதி Jegath Dias ,மாறாக பாதிக்கப்பட்டவர்கள் இல்லை.தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு இந்த வழக்கில் முக்கியமாக தமிழர்கள் , ஏன் இரு உயர்தர யேர்மன் அரசாங்கத்தின் உத்தியோகஸ்தர்களை யேர்மன் வெளிவிவகார அமைச்சு சாட்சியளிக்க நிறுத்தினார்கள் ? அதன் பின்னணி என்ன? என ஆராய வேண்டும்.

ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப்புலிகளை தடைசெய்யும் போது சில அங்கத்துவ நாடுகள் சம்மதிக்கவில்லை . ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை இவர்களின் வழக்குக்கு மட்டும் அல்ல முக்கியமாக சமாதான பேச்சின் முறிவுக்கு காரணமாக அமைந்தது.ஆதலால் தமிழர்கள்,யார் இத் தடைக்கு ஆதரவு அளிக்கவில்லை என்பதை கண்டு பிடிக்க வேண்டும் . அவர்கள் தான் எதிர்காலத்தில் உண்மையாக தமிழர்களுக்கு ஆதரவு தரக்கூடியவர்களாக இருக்கமுடியும் , இவ் வழக்கின் தீர்ப்பில் தமிழர்களின் எதிரிகளான நாடுகளின் தகவல்கள் வெளிச்சத்தில் இருந்து மறைக்கப்பட்டிருகின்றது.யார் எமது எதிரிகள் மற்றும் யார் எமது நண்பர்கள் ? என்பதை கண்டுபிடிப்பது எமது கடமை.

இது மிகவும் முக்கியமான விடையம் .இதை தமிழர்கள் இந்த வழக்கில் இருந்து பாடமாக கற்றுக்கொள்ள வேண்டும்.

நன்றி


யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை


தொடர்புகட்கு :

http://www.vetd.info