"SELF DETERMINATION IS KEY TO THE WORLD PEACE"
ஜப்பான்,நிப்பான்,நிஹோ(ன்) என்றழைக்கப்படும் பெருவள நாட்டினை நேரில் கண்டு மலைப்படைந்த எனது (20 நாட்கள்) பயணம் ! ஒவ்வொரு ஜப்பானியரும் ஒழுங்கு, கட்டுப்பாடு,எதிலும் தூய்மை, செய்நேர்த்தி,இயல்பான தாய் மொழிப்பற்று கொள்வதில் பெருமிதம் கொண்டு வாழ்வதைக் கண்குளிரக் கண்டேன் ! விளைவோ தீவிர நாட்டுப் பற்று தவிர எங்கும் எதிலும் தாய் மொழி கொண்டு உயர் தொழில் நுட்பத்தில் ஏன் அனைத்திலும் அசுர வளர்ச்சி ! அவ்வனுபவத்தினை பகிர விழைந்து வலைத்தளம் கண்டேன்!
ஹிரோஷிமாவில் அழிவின் அடையாளம் !
Tuesday, August 24, 2010
ஜப்பானின் வீரமும் தாய் மொழியும் !
நான் கொடுத்த தலைப்பு “எங்கெங்கு காணினும் தாய் மொழியே!தமிழ் நாட்டிலா? இல்லை! இல்லை ! நான் கண்ட ஜப்பானில் !” ஆனால் சொல்லத் தொடங்குவதோ அவர்தம் வீரத்தையும் சேர்த்து ! என்னவாயிற்று இவருக்கு ? நல்ல கேள்வி ! தினமணி நாளிதழ் இன்றைய தமிழனின் உண்மை நிலை பற்றி கூறிய செய்தி என்னை அப்படி மாற்றியதுவே !
1.தினமணி நாளிதழில் இன்றைய (12-08-10) தலைப்புச் செய்தி !
நடுவண் அரசு வெளி உறவுத் துறை அமைச்சரின் பேச்சு இன்று (12-08-2010) தின மணி நாளிதழில் தலைப்பாக , "தமிழக மீனவர் உயிருக்குப் இந்திய அரசு பாதுகாப்புத் தரமுடியாது ! " என்ன ஓர் ஆணித்தரம் ? எனவே என் தலைப்பு சிறிது மாறினால் குற்றம் இல்லை !
2. உலக வரலாற்றில் பின் நோக்கிய ஒரு சிறு பயணம்:
சீனா , ஜப்பான் , தாய்லாந்து ஆகிய மூன்று நாடுகள் மட்டும் வெளிநாட்டு ஆளுகையின் கீழ் வந்ததில்லை ! ஏன் ? இந்த மூன்று நாடுகளைப் போல் தன் மொழி, இனம், பண்பாடு காக்கத் தவறியதால் தமிழனுக்கு இன்றைய இழி நிலை !
3. பிறநாடுகளுடன் வரலாற்று ஒப்பாய்வு :
தமிழரின் இற்றை நோய் நாடி அவர்தம் நோய் முதல் நாடி அதற்கும் மருந்து கண்ட மேனாள் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் க.ப. அறவாணன் அவர்கள் "தமிழர் அடிமையானது ஏன் ? எவ்வாறு ?" எனும் தன் நூலில் சீனா, ஜப்பான், தாய்லாந்து ஆகிய நாடுகள் மட்டுமே ஐரோப்பியருக்கு அடிமையாகாமல் தன்மானத்தை இழக்காமல் போராடி நின்றன எனத் தெரிவிக்கிறார்.
I .(அ) தன் நிலை அறியாத சான்றோர் யார்?
தமிழறிஞராகிய அவர், வரலாற்று ஒப்பாய்வாளராகவும், நம் இனத்தின், மொழியின், நாட்டின் இழி நிலைக்கு மருத்துவராகவும் மருந்தும் கண்டார் !
மருத்துவர் மருந்துச் சீட்டுதான் எழுத முடியும் ! நோயுற்ற தமிழினம் தனக்கு நோய் உள்ளது என்று உணரின் அன்றோ மருந்தைத் தேடுவர்!தொடுவர் ! துடித்தும் எழுவர் ! நாம்தான் தன் நிலை அறியாச் சான்றோர் ஆயிற்றே !
ஆ. சீனம் ஐரோப்பியருக்கு அடிமை ஆகாமை :
சீனத்து வரலாற்றைத் தெரிந்தவர்கள் பிரிட்டிஷ் அரசின் குள்ளநரித்தனத்துக்கு முதல் முயற்சியிலேயே குட்டு வைத்து சீனத்துள்ளே நுழைய பல கட்டுப்பாடுகள் விதித்து மீறினால் கடும் தண்டனை என மிரட்டியும் பின்னர் அனுமதித்தார்கள்.
அப்படியும் சீனர்களைக் அபினி (ஓப்பியம்) போதைக்கு அடிமையாக்கி ஆங்கில வணிகர் என்ற போர்வையில் வந்த நாடு பிடிக்கும் குள்ள நரிக் கூட்டம் தன் புத்தியைக் காட்டியது.
1729-இல் சீன அரசு அபினிக்குத் தடை விதித்தது! பிரிட்டிஷ் அரசு தன்னாட்டு அபினி வியாபரிகளைக் கண்டிக்கத்தானே வேண்டும்! செய்தார்களா ? ஆனால் மாறாக ஆங்கில வணிகத்துக்குப் பாதுகாப்பு என்ற பெயரில் இரண்டு கப்பல்களை சீனாவின் கான்ட்டன் நகருக்கு அனுப்பி வைத்தது பிரிட்டிஷ் அரசு ! தரை இறங்கிய வீரர்கள் ஒரு சீனரைக் கொன்று சீன வணிகக் கப்பல்களை மூழ்கடித்தனர்!
1840-இல் சீனத்துக்கு எதிரான முதலாம் அபினிப் போர் எதிர்பாராமல் நடந்தது. அந்த ஆங்கிலேயரை அடித்தும் விரட்டினர் கான்ட்டன் மக்கள்.
1842- இல் மீண்டும் ஆங்கிலேயர் அபினிப் போரைத் திணித்தனர்.வெட்கம் ! வெட்கம்! இதில் இந்தியாவிலிருந்து வந்த 10000 பேர் கூலிப்படையினரென்று சீன வரலாற்று ஆசிரியர் சுட்டுகின்றனர்.
போர்ச்கீசியரும், ஸ்பானியரும், பிரிட்டிஷாருடன் பிரெஞ்சுக் காரனும் கூட்டு சேர்ந்து தொடர்ந்து சீனத்துக்கு தொல்லை கொடுத்துவந்தனர்.
31-01-1949 அன்று பொதுஉடைமைப் படைகள் பீக்கிங்கைக் கைப்பற்றும் வரை ஓயாத போராட்டத்தை சீன மக்கள் தொடர்ந்து நடத்தினர்.
இப்போதாவது புரிகிறதா தமிழர்களே ! ஆங்கில வணிகர்கள் என்ற போர்வையில் வந்த நாடு பிடிக்கும் நரிகளே பிரிட்டிஷ் அரசும் மற்ற ஐரோப்பிய நாடுகளும் என்றே !
இ. யப்பானின் வீரம் ஐரோப்பியரைத் தாக்கி அழித்ததுவே:
மேல் நாட்டரின் பண்பாட்டுத் தாக்கத்தை ஜப்பானியரின் போர்க்குணமும் தாய் மொழிப் பற்றும் தவிடு பொடியாக்கிற்று . இன்றளவும் இந்தத் தன்மானம் அந்த நாடுகளுக்கு கொடுத்த பலனை அந்நாடுகள் இன்றுவரை அனுபவித்தும் வருகிறார்கள் .
ஈ. ஜப்பானியரின் எழுச்சிமிகு நடவடிக்கைகள் :
i. போர்ச்சுகீசியர் நாடு கடத்தப்பட்டனர் !
தொகுகாவா இயேயாசு (கி.பி.1603-1605) என்னும் சோகன் தலைமுறையைச் சார்ந்தவர் ஜப்பான் மன்னர் ஆனார். அவர் அரசராவதை அப்போது ஜப்பானில் நுழைந்திருந்த போர்ச்சுகீசியர்கள் (கி.பி 1600 ) எதிர்த்தனர். எனினும் அவர்கள் எதிர்ப்பையும் மீறி அவர் அரசரானார்.
1614–இல் நாகசாக்கி என்னும் இடத்துக்கு வரச்செய்து அந்த போர்ச்சுகீசியரகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு செய்தார் ஜப்பானிய அரசர் !
ii. பிரான்சிஸ் சேவியரின் தோல்வி :
இந்தியாவுக்கு வந்து மத மாற்றம் செய்து புகழ் பெற்ற பிரான்சிஸ் சேவியர் 1549-இல் ஜப்பானக்குச் சென்று அந்நாட்டு அரசரை மதம் மாற்ற முயன்று தோல்வியுற்று 1553- இல் கோவாவுக்குத் திரும்பினார். 1587 – இல் கிருத்துவ மதப் பிரசாரத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. 1612 – இல் கிருத்துவ மதம் தடை செய்யப்பட்டது.
iii. ஸ்பானியர்களுக்குத் தூக்கு தண்டனை :
1616–இல் அரசின் சந்தேகத்துக்கு ஆளான ஸ்பானியர்கள் தூக்கிலிடப்பட்டார்கள்.
iv ) ஐரோப்பியர்க்கு உதவிய நாட்டுடன் உறவு முறித்தல் :
இவர்கள் வருகைக்குக் காரணமாகவும் துணை யாகவும் இருந்த பிலிப்பைன்சுடன் ஜப்பான் உறவை முறித்துக்கொண்டது.
v ) ஐரோப்பியரைத் தனிமைப் படுத்தித் தீவில் சிறை வைப்பு :
போர்ச்சுகீசியர், ஸ்பானியர், ஆங்கிலேயர் , டச்சுக்காரன், ஆகியவர்களின் செயல்கள் நம்பிக்கைக்கு உரியனவாக இல்லாமையால், நாகசாகிக்கு அருகில் உள்ள தேஷிமா தீவுக்கு அனுப்பி அங்கும் ஓராண்டுக்கு மேல் இருப்பது கூடாது என்றும் அவர்கள் தங்கள் மனைவியரைக் கொண்டு வருவதும் தடை செய்யப்பட்டது .
vi. ஜப்பானில் நுழைய ஐரோப்பியர்க்குத் தடை – மரண தண்டனை :
1637 -38- இல் ஸ்பானியர்களும், போர்ச்சுகீசியரும் ஜப்பானுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டது . மீறினால் மரண தண்டனை என்றும், அவர்களை ஏற்றி வரும் மாலுமிகளும் தீக்கு இறையாவார்கள் என்றும் அறிவித்தார்கள். மறைவாக வாழ்ந்து வந்த ஐரோப்பியர்கள் 61 – பேர்கள் கண்டு பிடிக்கப்பட்டுத் தூக்கிலும் இடப்பட்டார்கள்.
vii. ஐரோப்பியரின் பழிக்குப் பழி :
இப்படி வெற்றிகரமாகவும் , மாவீரத்துடனும் ஐரோப்பியர்களை எதிர் கொண்ட யப்பானியர்க்கு பரிசுதான் இரு அணு குண்டுகள் ! இப்பொழுது புரிகிறதா ? அணுகுண்டு வீச ஏன் , நாகசாக்கி நகரம் தேர்ந்து எடுக்கப்பட்டது ? ஏனெனில் அதே நாகசாக்கியில்தானே ஐரோப்பியர்கள் சிறை வைக்கப்பட்டு, மரண தண்டனைக்கு ஆளானார்கள். பழிக்குப் பழி என முந்நூறு ஆண்டுகள் கழித்து ஐரோப்பியர் அமெரிக்கா மூலம் கொடுத்த கொடுந் தண்டனை அல்லவா ? இரண்டாம் உலகப்போருக்குக் காரணமான ஜெர்மனியின் மீது ஏன் அணுகுண்டு வீசப் படவில்லை ? அது ஐரோப்பிய நாடு என்ற ஒரே காரணம்! ஜப்பான் மீதோ! நாமும் வரலாற்றிலிருந்து பாடம் கற்க வேண்டாமா ?
II. (அ) தாய்லாந்து ஐரோப்பியரால் அடிமை கொள்ளா நாடு !
மன்னர்கள்:
௧. இராம கமேங் (கி.பி 1287-1317)
௨.இராம திபடி (கி.பி 1350-1369 )
௩ .திரைலோக் (கி.பி. 1448-1488)
மூவரும் மொழி, எழுத்து, மதம் ஆகிய மூன்றும் தாய் மொழி மணம் கமழுமாறு பார்த்துக் கொண்டது இன்று வரை அவை மாறாமல் இருப்பதற்குக் காரணம் !
அரசரை இறைமை வாய்ந்தவர் என சீன, ஜப்பானிய , தாய்லாந்து ஆகிய நாட்டு மக்கள் நம்பியது ஆளுவோர் வெளியிலிருந்து வருவதும் தடுக்கப் பட்டது .
IV. (அ) தமிழன் முதன் முதலில் அடிமை ஆன ஆண்டு !
1311- இல் மாலிக்காபூரின் உதவியை சுந்தர பாண்டியன் நாடி தன் பங்காளி வீரபாண்டியனை அழிக்க நினைத்து வேற்று மொழியாளனுக்குத் தமிழரை அடிமை ஆக்கினான். (பக்.260 – தமிழ் நாட்டு வரலாறு , முனைவர் பா.இறைஅரசன் )
தெலுங்கர்க்கு அடிமை : 1378 – 1732-
மராட்டியர்க்கு அடிமை : 1676 – 1855
ஆ. அடிமைத் தமிழன் மீண்டும் ஐரோப்பியர்க்கு அடிமையானான் :
ஜப்பானிலோ ஐரோப்பியனை அழித்தொழித்தான் என மேலே விரிவாக ஆராய்ந்தோம் !
ஆனால் 17-05-1498 அன்று கோழிக்கோடு வந்தடைந்த வாசுகோ ட காமா நாடுகளைத் தேடி கண்டுபிடிக்க வரவில்லை ! அவன் போர்ச்கீசிய நாட்டு ஆதரவுடன் நாட்டைப் பிடிக்க வந்த கடல் கொள்ளைக்காரன்! அவனை வருக வருகவென வரவேற்றான் கோழிக்கோட்டு மன்னன் ! இந்தியாவில் ஐரோப்பிய காலனி ஆட்சிக்கு அன்றே வித்தும் இடப்பட்டது !
1640 – களில் கோழிக்கோடு தொடங்கி மதுரை வரை போர்ச்சுகீசிய ஆட்சியின் அடிமைகளாக்கி மேற்குக் கரையிலும், கிழக்குக் கரையிலும் , இலங்கை வரை போர்ச்சுகீசிய மொழியைத் திணித்தனர். மதத்தையும் மாற்றினர்.
டச்சுக்காரன் 1649 பிப்ரவரி 10 – ஆம் நாளில் திருச்செந்தூரைக் கைப்பற்றினான் .
ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பனி 1790-இல் மதுரையை வாங்கியது. 1792 –இல் ராமநாதபுரத்தை விலைக்கு வாங்கியது.
1801 – இல் சென்னையில் ஆங்கில ஆட்சி துவங்கி 1947 – வரை இந்தியாவை ஆண்ட ஆங்கில அரசின் அடிமையாய் இருந்தான் தமிழன்.
எதையோ கூறப்போய் தமிழனின் இழி நிலை, அடிமை வாழ்வை விளக்க வேண்டியதாயிற்று.
எடுத்துக்கொண்ட தலைப்பிற்கு மீண்டும் வருவோம் !
நாம் சிந்திக்க வேண்டாவா ?
V. (அ). யப்பானின் வழங்கு மொழி யப்பானிய மொழியே:
மேல்நாட்டாரின் பண்பாட்டுத் தாக்கத்தை யப்பானியரின் போர்க்குணமும் தாய் மொழிப் பற்றும் தவிடு பொடியாக்கிற்று . இன்றளவும் இந்தத் தன்மானம் அந்த நாட்டுக்குக் கொடுத்த பலனை என் யப்பானிய பயணத்தில் (அக்டோபர் 2008) கண்ணார மனம் குளிரக் கண்டேன். உலக G-8 என்கிற பணக்கார நாடுகளில் ஒன்றான யப்பானில் வழங்கு மொழியோ தாய்மொழி மட்டுமே !
ஆ )எங்கும் எதிலும் யப்பானிய மொழியே :
டோக்யோ விமான நிலையம் போன்ற முக்கிய இடங்களில் மட்டும் போனால் போகிறது என்று பெயர் பலகை ஆங்கிலத்தில் உள்ளது. எங்கும் எதிலும் யப்பானிய மொழியே ! ஆங்கிலத்தின் துணை இன்றி இன்றுவரை யப்பான் விரைந்த உயர்ந்த முன்னேற்றத்தை எட்டியுள்ளது.
எழுத்தில்லா யப்பானிய மொழி , சீன பட எழுத்துக்களைப் பயன்படுத்தி ஹிராகானா என்ற மொழிப் பகுதியில் யப்பாநியச் சொற்களையும், சீனத்துச் சொற்களை காஞ்சி என்ற மொழிப் பகுதியிலும் ,“கத்தகானா” என்ற செந்தரப்படுத்திய அயல் மொழிச் சொற்கள் என மூன்றாகத் பிரித்த மொழியே ஆகும். இவ்வாறு இன, மொழி, நாடு என உறுதியாக இருந்த யப்பானியர் அமெரிக்கர்களை, ஐரோப்பியர்களை திணறடித்து அடைந்த வெற்றிகள் வரலாறு படைத்தனவே !
இ) யப்பானியரின் இனப் பற்று, மொழிப் பற்று , நாட்டுப் பற்று கொடுத்த வெற்றிகள் :
i) அந்தக் காலத்தில் மேலை நாட்டினர் பெரும் பொருள் செலவு செய்தும், கடும் உழைப்பை நல்கியும், பல ஆண்டுகள் காத்திருந்து கண்டவைகளை உடனே யப்பானியர்கள் தன் தயாரிப்பாக வெளியிட முடிந்தமை !
ii) இன்றோ யப்பானியர்கள், உலகத்தரம் வாய்ந்த பாலங்கள், ஆண்டுக்கு பத்தாயிரம் முறைகளுக்கு மேல் வரும் நில அதிர்வுகளைத் தாங்கும் விண் முட்டும் கட்டிடங்கள் . ஒரு கிலோ மீட்டர் உயரக் கட்டிடம் என சாதனைகள் !
iii) அதிவேக இரயில் வண்டி : சின்கான்சின் என ஜப்பானிய மொழியில் பெயர் வைத்து மணிக்கு 320 கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறது. அலுங்காமல் குலுங்காமல் இனிமையான பயணம். டோக்கியோவிலிருந்து 800 கி. மீ தொலைவில் உள்ள ஹிரோஷிமா நகரை 3 மணி 30 மணித்துளிகளில் சென்றடைகிறது.
iv) மருத்துவத்தில் உலகத்தில் சிறந்த ஆராய்ச்சிகள் நடக்கும் நாடும் யப்பானே! மகிழுந்துகள், மின் அணுக் கருவிகள் , ஒளிப் படக் கருவிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள் என எண்ணிலடங்கா சாதனைகள் !
v.ஜப்பானில் உள்கட்டமைப்பு !
நாம் எங்கே ? எனது ஜப்பானிய பயணத்தில் நான் கண்ட உள்கட்டமைப்பு : புகைப் படங்கள் காண சொடுக்குக !
என் வலைத்தளமுகவரி :
http://picasaweb.google.co.in/thambu6/xCITAC#
நான் கண்ட இடங்கள் :
நிஷி-காஸ்சாய், அசகுசா, , கின்சா , அகிபாரா டோக்கியோவில் , காமகூரா, ப்யுஜியாமா, ஹக்கொனே, ஹிரோஷிமா, மியாஜிமா , மிசென் மலை ஆகியன மற்ற இடங்கள் !
VI. என் கண்ணோட்டத்தில் ஜப்பானும் அவர்தம் பண்புகளும்!
ஜப்பான் என்று அறியப்படும் நாடு தன்னை நிப்பான் என அழைப்பதையே விரும்புகிறது ! நிஹோ(ன்) எனவும் அந்நாடு அழைக்கப்படுகிறது !
ஹிரோஷிமா , நாகசாகி நகரங்கள் அணுகுண்டால் தரைமட்டாகி பல லட்ச மக்கள் பொசுங்கி பேரழிவை அடைந்தனர் !
பினிக்ஸ் பறவையைப் போன்று சாம்பலில் இருந்து எழுந்த நாடு !
வல்லரசுகளுடன் பொருளாதாரப் போட்டியில் முன் நிற்கிறது. ஜி .௮(8) நாடுகளில் வரிசைப் படுத்தப் பட்டுள்ள பணக்கார நாடு !
உழைப்பு , கடும் உழைப்பு , என வேறொன்றை அறியா மக்கள் !
"செய் அல்லது செத்து மடி !" இலக்கணமே நிப்பானியர்கள் ! தற்கொலையிலும் முன்னணி வகிக்கும் நாடே ! அவர்கள் தேனீக்களைப் போல் உழைத்து மடியும் இனம் ! வாழ்ந்து அனுபவிக்கிறார்களாவென்பது மிகப்பெரிய கேள்விக்குறியே !
விட்டால் உலகையே தன் குடைக்குள் கொணரவேண்டும் என்ற வெறியும் அவர்தம் வரலாற்றில் உண்டு. சீனத்தின் மஞ்சூரியா , கொரியா போன்ற நாடுகளை ஆக்கிரமித்த நாடு நிப்பான்.போஸ்டன் தேநீர் விருந்து அமெரிக்க நாட்டின் வரலாறு !
உலகின் அமெரிக்க நாடு இன்று தாதாவாக ஆனது – நிப்பானின் மீது போடப்பட்ட அணுகுண்டுகளுக்குப் பின்னர்தானே !
உலகம் உன்னிப்பாக கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய நாடு ஜப்பான் !
Posted by தஞ்சை கோ. கண்ணன் at 9:49 PM
Global Peace Support Group UK Ltd is a registered organisation based in London. The organisation dedicated to be involved in humanitarian and other related issues. We also work along with other similar organisations to promote peace and harmony among various societies..
GLOBAL PEACE SUPPORT GROUP - UK - TIRELESSLY WORK ON THE CONCEPT OF:
"SELF DETERMINATION IS KEY TO THE WORLD PEACE"
MOURNS ON THE CONTINUED TRAGEDY OF THE PEOPLE OF North & East of Tamil EELAM WITH THE HOPE OF ALL OF OUR ENDEAVOURS WOULD BRING AN END TO THOSE SUFFERING DURING THE YEAR AHEAD.
The International community has a duty towards the long suffering Sri Lankan Tamil population to restore their rights of SELF DETERMINATION.
Global Peace Support Group - believes that this is the ONLY way for a permanent PEACE in Sri Lanka.