புலனாய்வுப் பொறுப்பாளர் சிரஞ்சீவி மாஸ்டரை

இந்தியா இலங்கையிடம் கையளித்தது !


Athirvu, 28 October, 2011 - விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் தலைவரான திரு பொட்டு அம்மானுக்கு மிக நெருங்கியவரும் மற்றும் 2ம் நிலை வகிக்கக்கூடியவர் என சந்தேகிக்கப்படும் சிரஞ்சீவி மாஸ்டரை தமிழக கியூபிரிவு பொலிசார் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் அளவில் கைதுசெய்தனர். அதன் பின்னர் அவர் சிறையில் இருந்தவாறே ஜூனியர் விகடனுக்கு ஒரு செவ்வியையும் வழங்கியிருந்தார். இதன் மூலம் தமிழகத்தில் அவர் கைதானது உறுதி செய்யப்பட்டது. ஆனால் அவர் தற்போது தமிழகத்தில் இல்லை. மத்திய அரசின் அறிவுறுத்தலுக்கு இணங்க அவரை கியூ பிரிவுப் பொலிசார் "ரா" உதவியுடன் இலங்கையிடம் கையளித்துவிட்டதாக செய்திகள் கசிந்துள்ளது.

2009ம் ஆண்டு இறுதிப்போர் நடைபெற்ற வேளைகளில் சிரஞ்சீவி மாஸ்டர் வன்னியில் இருந்தார். அவர் பின்னர் அங்கிருந்து தமிழகத்தில் வந்து தங்கியிருந்தார். இதனை எப்படியோ மோப்பம் பிடித்த கியூப் பிரிவு பொலிசார் அவரை கைதுசெதனர். பின்னர் அவரிடம் ரோ அதிகாரிகள் பல கட்ட விசாரணைகளை நடத்திவந்தனர். குறிப்பாக பொட்டம்மான் குறித்த விடையங்களை அவர்கள் சிரஞ்சீவி மாஸ்டரிடம் துருவித் துருவிக் கேட்டதாகவும் தகவல்கள் அப்போது வெளியாகியிருந்தது. இருப்பினும் அவர் தமிழகத்தில் சிறையில் இருக்கிறார் என்பதனை எல்லோரும் நம்பியிருந்தனர். ஆனால் இந்தியா மீண்டும் தனது வேலையக் காட்டிவிட்டது.

அவரை இலங்கை அரசிடம் ஒப்படைத்து பெரும் தூரோகத்தை மீண்டும் அரங்கேற்றியுள்ளது. சுமார் 3 மாதங்களுக்கு முன்னர் அவரை இந்தியா இலங்கையிடம் கையளித்துள்ளதாக தற்போது கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சுமார் 3 மாதங்களுக்கு முன்னர் இலங்கையில் இருந்து புறப்பட்டு கர்நாடகா செல்லவிருந்த இலங்கையின் வான்படை விமானம் ஒன்று இயந்திரக்கோளாறு காரணமாக மீனம்பாக்கத்தில் தரையிறங்கியதாகச் செய்திகள் வெளியாகியிருந்தது மக்களுக்கு நினைவிருக்கலாம். அவ்விமானம் உண்மையாகவே இயந்திரக்கோளாறு காரணமாகத் தரையிறங்கியதா இல்லை இந்தியா கைதுசெது வைத்திருந்த புலிகளின் முக்கியஸ்தர்கள் சிலரை இரகசியமாக ஏற்றிச் செல்லவந்ததா என்பதே தற்போது நிலவும் பெருங் கேள்விக்குறியாக உள்ளது.

தமிழ் நாட்டில் கைதாகியிருக்கும் சில புலிகளின் முக்கிய நபர்களை இந்தியா எவ்வாறு கைதிப் பரிமாற்றம் செய்கிறது? அதாவது ஒரு கைதி சொந்த நாட்டிற்கு திரும்பிச் செல்லும் வேளையில் அவருக்கு உயிர் ஆபத்து இருக்கிறது என்றால் அவரை இந்தியா போன்ற பாரிய ஜனநாயக நாடுகள் எவ்வாறு அனுப்பிவைக்கிறது என்ற கேள்விகளும் எழுகின்றன. ஐ.நா சாசனங்களையும் சர்வதேச சட்ட முறைகளையும் மீறி இலங்கைக்கு உதவிசெய்துவரும் இந்தியாவின் வாலைப் பிடித்துவரும் தமிழர்களுக்கு இனியாவது புத்திவருமா ? இல்லை இந்தியாவின் தலையீடு இல்லாமல் தீர்வு காணமுடியாது என்று அலட்டிக்கொண்டு திரியும் அரசியல் வாதிகளுக்கு இனியாவது அறிவுவருமா தெரியவில்லை.

இந்தியா இப்போது உணர்ந்துவிட்டது. புலிகள் அழிவால் சீனா இலங்கையில் காலூன்றிவிட்டது என்று எல்லாம் இணையங்கள் செய்திகளையும் ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதித் தள்ளும் இந்தவேளையில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு கடுகளவேனும் மாற்றம் வரவில்லை என்பதனை எமது சமூகம் எப்போது அறியப்போகிறது. இந்தியாச் சிறையில் இருந்த சிரஞ்சீவி மாஸ்டரை காட்டச் சொன்னால் தற்போது கியூப் பிரிவால் அவரைக் காட்ட முடியுமா ?

http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=1008