[ திங்கட்கிழமை, 03 ஒக்ரோபர் 2011, 06:42.34 PM GMT ]

வரும் வியாழன் ஒக்டோபர் 6ஆம் நாள் நடைபெறவுள்ள கனடாவின் ஒன்ராரியோ மாநிலத்திற்கான தேர்தலில் ஒன்ராரியோ புரோகிரசிவ் கன்சவேட்டிக் கட்சி சார்பில் தமிழர்கள் அதிகம் வதியும் மாக்கம் – யூனியன்வில் தொகுதியில்
போட்டியிடும் சான் தயாபரனின் தேர்தலுக்கு முன்னரான வார இறுதித் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்றுள்ளன.

சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கனடாவின் குடியரவு அமைச்சர் ஜெசன் கெனி அவர்கள் கலந்து கொண்டு சான் தயாபரனுக்காக மக்களிடம் வாக்கு கேட்டார். முதலில் சான் தயாபரன் தேர்தல் அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்து அவர்களிடையே பேசி உற்சாகம் அளித்த அமைச்சர் கெனி பின்னர் சான் தயாபரனுடன் சென்று வீடு வீடாக மக்களிடம் சான் தயாபரனுக்காக வாக்குக் கேட்டார்.
மாநில கன்சவேட்டிவ் கட்சித் தலைவர் ரிம் கியூடாக் அவர்களும் முன்னர் சான் தயாபரனின் தேர்தல் தொகுதியில் தேர்தல் பிரச்சார நிகழ்வுகளில் தனது மனைவி குழந்தை சகிதம் குடும்பமாக் கலந்துகொண்டுள்ள நிலையில் தற்போது மத்தியில் ஆட்சியிலுள்ள கொன்சவ்வேட்டிவ் சமஷ்டிக் கட்சி அமைச்சர் வந்து கலந்து கொண்டிருப்பது தமிழ் வேட்பாளர்களுக்கு வழங்கும் முக்கியத்துவத்தையே எடுத்துக் காட்டுகிறது.
தேர்தல் மாநிலம் தழுவி இன்னும் இறுக்கமாகவும் உள்ள சூழலில் தேர்தல் களத்தில் உள்ள தமிழ் வேட்பாளரான சான் தயாபரனுக்காக தமிழ் மக்கள் ரொரன்ரோ பெரும் பாகம் எங்கிலும் இருந்து வந்து தேர்தல் பணிகளில் வார இறுதி நாட்களான சனி ஞாயிறு நாட்களில் கலந்து கொண்டனர்.
இன்னும் மூன்று நாட்களே தேர்தலுக்கு உள்ள நிலையில் வரும் திங்கள் முதல் புதன் வரையிலான நாட்களில் இறுதிக்கட்ட பரப்புரை செயற்பாடுகளில் இணைந்து உதவுமாறு ரொரன்ரோ பெரும் பாகம் வாழ் தமிழ் மக்களை சான் தயாபரன் தேர்தல் குழு அன்புடன் அழைத்துள்ளது.
அத்துடன் தேர்தல் தினமான வியாழன் அன்று தேர்தல் நாள் தேர்தல் பணிக்காக பெரும் எண்ணிக்கையிலான தொண்டர்கள் தேவைப்படுவதால் வசதி உள்ளவர்கள் அனைவரையும் அப்பணியில் இணைத்து உதவுமாறும் தேர்தல் குழு மேலும் வேண்டியுள்ளது.
சான் தயாபரனின் தேர்தல் அலுவலக் முகவரியும் தொடர்பிலக்கமும் வருமாறு