"SELF DETERMINATION IS KEY TO THE WORLD PEACE"
நண்பர்களே,
வெள்ளிக்கிழமை (10/14/2011)இரவு "உதவும் கரங்கள்" நிறுவனத்திற்கு நிதி திரட்ட நடைபெறும், “Harmony Unlimited” குழுவினர் வழங்கும் இன்னிசை நிகழ்ச்சி பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த இன்னிசைக் குழுவினரை நேற்று கலக்கல் கதம்பம் வானொலி நிகழ்ச்சிக்காகச் சந்தித்தேன். இது தவிர உதவும் கரங்கள் நிறுவனர் வித்யாகர் அவர்களுடனும் (தொலைபேசி வழியாக), திருமதி பத்மினி ரங்கநாதன், திரு ராஜன் ராதாகிருஷ்ணன் அவர்களுடனும் பேசும் ஒரு வாய்ப்பு கிட்டியது.
அவர்களிடம் பேசியதில் இருந்து இது ஒரு மிகச் சிறப்பான நிகழ்ச்சியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்த நிகழ்ச்சிக்கு நீங்கள் ஏன் வர வேண்டும்?
3. பத்மஸ்ரீ ஹரிஹரன் அவர்கள் வழி நடத்திய “ஹரியுடன் நான்” நிகழ்ச்சியின் சிறந்த ஏழு பாடகர்களை உள்ளடக்கியது இந்தக் குழு. தென்னிந்திய/வட இந்திய சங்கீத பாணியில் வல்லுநரான ஹரிஹரனிடம் “குட்டு” வாங்கிய இவர்களிடம் இளமை, புதுமை மட்டுமல்லாமல் நல்ல அடக்கமும், பயிற்சியும் நிறையத் தெரிகிறது. இவர்கள் பற்றி மேலும் அறிய http://www.youtube.com/watch?v=XPFJVdxsnF8
2. நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மிகச் சிறந்த ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். உணவு மற்றும் அரங்கம் எல்லாவற்றிலும் இந்த நிகழ்ச்சி சிறந்து விளங்கும் என்பதில் ஐயமில்லை. நுழைவுச் சீட்டை www.tickets2events.com வழியாக இன்றே வாங்கினால் இரவு உணவு மற்றும் அரங்க அமைப்புக்கு வசதியாக இருக்கும் என்பது நிகழ்ச்சி அமைப்பாளர்கள் விண்ணப்பம்.
1. உதவும் கரங்கள் –இவர்கள் செய்யும் பணியை நான் விளக்க வேண்டாம். கடந்த ஒன்பது வருடங்களாக ஆதரவு தரும் உங்களுக்கே தெரியும். உங்கள் ஆதரவு சிறந்த பலன் அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
எனவே, அலையெனத் திரண்டு இன்னிசை மழையில் நனைய வாரீர்.
நிகழ்ச்சியில் சந்திப்போம்.
நன்றி,
நடராஜ கிருஷ்ணன்
நிகழ்ச்சிக்கு அனுமதிசீட்டு வாங்காதவர்களுக்குத் தகவல்.
Donations/Tickets
$25,$50,$100 & Above
Dinner Included
$15 [ individual] Balcony Seating [ Dinner NOT included]
7:30-Dinner
8:15-Program
Tickets through www.tickets2events.com
In Houston
Friday Oct 14th7.30p.m. Old Stafford Civic Center
1415 Constitution Ave
Stafford, Texas 77477
In Dallas
Sunday, Oct 16th at Granville Arts Center3p.m.
Ramya 214 232 5961 or Rajamani 646 226 4824
Checks payable to Udavum Karangal of USA
Contact : Padmini 713-829-2040 Rajan : 832-656-7861
Alpa: 832-428-4470
Net proceeds will benefit Udavum Karangal. Visit
www.udavumkarangal.org
Global Peace Support Group UK Ltd is a registered organisation based in London. The organisation dedicated to be involved in humanitarian and other related issues. We also work along with other similar organisations to promote peace and harmony among various societies..
GLOBAL PEACE SUPPORT GROUP - UK - TIRELESSLY WORK ON THE CONCEPT OF:
"SELF DETERMINATION IS KEY TO THE WORLD PEACE"
MOURNS ON THE CONTINUED TRAGEDY OF THE PEOPLE OF North & East of Tamil EELAM WITH THE HOPE OF ALL OF OUR ENDEAVOURS WOULD BRING AN END TO THOSE SUFFERING DURING THE YEAR AHEAD.
The International community has a duty towards the long suffering Sri Lankan Tamil population to restore their rights of SELF DETERMINATION.
Global Peace Support Group - believes that this is the ONLY way for a permanent PEACE in Sri Lanka.