Sent: Friday, 21 October 2011, 13:18

யாழ். போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 24ஆவது வருட நினைவஞ்சலி

வெள்ளிக்கிழமை, 21 ஒக்டோபர் 2011 17:42

(கவிசுகி)

கடந்த 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் கடமையில் இருந்தவேளை இந்திய இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்ட யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்களின் 24 ஆவது வருட நினைவஞ்சலி இன்று வெள்ளிக்கிழமை காலை அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் திருமதி பவானி பசுபதி ராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். போதனா வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, இறந்தவர்களின் புகைப்படங்களுக்கு அவர்களது உறவினர்கள் மாலை அணிவித்து தமது அஞ்சலிகலியை செலுத்தினர்.

நன்றி: தமிழ்மிரர்

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/29743–24-.html