Mon, 6 June, 2011 11:19:18

மனிதம் அனுப்பிய புத்தகங்கள், கனடாவில் உள்ள புலிகள் அமைப்பிற்கு அனுப்பப்பட்டதாம். கதை சொல்கிறது தி ஐலன்ட் என்ற இலங்கை நாளிதழ் [1 Attachment]


[ Tamil Agni included bel
To: MANITHAM MANITHAM <manitham@gmail.com>
Sent: Mon, 6 June, 2011 3:27:07 PM
Subject: மனிதம் அனுப்பிய புத்தகங்கள், கனடாவில் உள்ள புலிகள் அமைப்பிற்கு அனுப்பப்பட்டதாம். கதை சொல்கிறது தி ஐலன்ட் என்ற இலங்கை நாளிதழ்
மனிதம் அனுப்பிய புத்தகங்கள், கனடாவில் உள்ள புலிகள் அமைப்பிற்கு அனுப்பப்பட்டதாம். முதல் பக்க தலைப்பு செய்தியாக கதை சொல்கிறது "தி ஐலன்ட்" என்ற இலங்கை நாளிதழ்
சென்னையிலிருந்து கனடாவிற்கு அனுப்பப்பட்ட 1,440 புத்தகங்களும் புலிகளின் தொடர்புகளிற்கு அனுப்பப்பட்டதாக இன்று இது பற்றி தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ள ஐலன்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது.
மனிதம் இன்ரநசனல் என்ற அமைப்பால் சென்னையிலிருந்து அனுப்பப்பட்ட இந்த கொள்கலன் கொழும்பில் வைத்துப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய இந்தப் பத்திரிகையின் செய்தி மனிதம் அமைப்பின் அக்னி சுப்பிரமணியம் இந்தப் புத்தகங்களை திரும்பிப் பெறுவதற்காக பரிந்துரைக்க தமிழ்நாட்டு முதலவர் ஜெயலலிதாவைத் சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளது.
கனடாவிலுள்ள புலிகளின் வழிகாட்டியாகக் கருதப்படும் முன்னைநாள் பாதிரியாரான அன்ரன் சின்னராசா என்பவரிற்கு இந்தப் புத்தகங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள மேற்படி பத்திரிகை இந்த நபர் போரினால் பாதிக்கப்பட்டவர்களிற்கான அமைப்பின் தலைவராகவும் இருந்து மேற்படி தேவையைப் பூர்த்தி செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மட்டுநகர் சிறையுடைப்பின் போது தப்பியவரான மேற்படி நபர் புலிகளின் முக்கியமான குடும்பம் ஒன்றில் திருமணம் செய்தவரென்றும், நோர்வேயில் அகதியாக வந்து கனடாவிற்கு வந்தவரென்றும் மேலும் செய்தி தெரிவித்துள்ளது.
ஐலன்ட் பத்திரிகை உளவுப்பிரிவைத் தொடர்பு கொண்ட போது இப்புத்தகம் அனுப்பப்பட்ட முகவரி கனடியப் புலிகளிற்கு உரியது என்றும் சி.எச்.ஆர்.வி.டபிள்யூ என்ற நிறுவனமே இந்த முயற்சிக்குப் பாவிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த நபர் கனடாவின் பணத்தில் ஒரு சமுகசேவை நடத்துபவராக வேலை செய்வதாகவும் தெரிவித்துள்ள ஐலன்ட் இந்தப் புத்தக விவகாரம் தொடர்பான விவரமான செய்திகளை வெளியிட்டுள்ளது.
த ஐலண்ட் செய்தி:
http://pdfs.island.lk/2011/06/06/p1.pdf
http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=27144